முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி தெருவில் ஷபீகா ஜிவல்லரி உரிமையாளர் ஜனாப்.ஹாஜமைதீன் அவர்கள் தனது குட்டியார் பள்ளி வாசல் எதிர்புறத்தில் உள்ள அவரது வீட்டை இடித்து புது வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் அப்போது கொத்தனார் வேலைகள் மும்புரமாக நடைபெற்று வந்த நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள மது சுவர் தீடிரென்று இடிந்து பணியாட்கள் மேலே விழுந்தது. இது குறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு துறைனருக்கு தகவல் தெருவிக்கப் பட்டன . தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.கு.வாசு, திரு.ராஜேந்திரன் மற்றும் பணியாட்களுடன் உடனே வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் பணியாற்றிய திருமதி.நாடிமுத்து வயது 35 , தமிழரசு வயது 28 , திரு சுரேஷ் வயது 30 ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமையில் சேர்க்கப்பட்டனர். அதில் சுரேஷ் என்பவரது கை துண்டாகியதால், அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த உடனே முத்துப்பேட்டையின் பேரூராட்சி தலைவர் திரு.கோ.அருணாச்சலம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு இதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றார்,உடன் அ.தி.மு.க.நகர துணைத் செயலாளர் ஜனாப்.முஹம்மது முஹைதீன் அவர்கள் உடனிருந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி.EK .முனவ்வர் கான்.
முத்துப்பேட்டையில் வீடு இடிந்து விழுந்ததில் சிக்கிய கொத்தனார் கவலைக்கிடம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment