முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் 110 KV மின்சாரம் விரைவில் அமைக்கப்படும் திரு.கோ.அருணாசலம்.





முத்துப்பேட்டை,அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட திரு.கோ.அருணாசலம் அவர்கள் 2328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவர் தனது பொறுப்பை ஏற்று பதவியில் அமர்ந்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று பெற்றி பெற்றதின் மூலம் முத்துப்பேட்டை மக்களுக்கு என்ன செய்ய உள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, பின்னர் பதிலளித்த அவர், கட்சிக்கும், கட்சிக்கு அப்பாற்பட்ட பொது மக்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தான் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்றும்,அந்த நம்மிக்கைக்கு பாத்திரமாக நான் கொடுத்த தேர்தல் வாக்குரிதியின் விளம்பரம் செய்த நோட்டிசில் கண்டுள்ளபடியும் அதற்கு மேல் அரசால் வழங்கப்பட இருக்கின்ற பல்வேறு நல திட்டங்களும், இன்று முத்துப்பேட்டை பகுதியை ஆளுகின்ற இயக்கத்திருக்கு சொந்தமாக இருக்கின்ற தலைவர் என்ற அடிப்படையில் பல்வேறு நல திட்டங்களை கொண்டு வந்து முத்துப்பேட்டையை தமிழகத்திலேயே பட்டி தொட்டில்கலெலாம் பேசபடுகின்ற அளவிற்கு தான் செயல் படுவேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் கட்சி அமைந்தவுடன் அரசுக்கும், துறைசார்ந்த அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர் மூலமாக கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் 85 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு நீர் தேக்கத் தொட்டி கட்டுவதெற்கு அவற்றை விரைவில் செயல் படுத்த போவதாகவும் அப்போது அவர் தெருவித்தார். மேலும் மருதன்காவெளி, செம்படவன்காடு ஆகிய பகுதிகளில் தனி தனி ஓவர் டாங் கட்டி தடையற்ற குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், முத்துப்பேட்டையில் நிரந்தரமாக தடையற்ற மின்சாரம் கிடைக்க 110 KV டிரான்ஸ்பார்மர் வைக்க வேலைகள் துவங்கப்பட உள்ளது என்றும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு மன்னார்குடி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை இன்னும் 1 மாதத்திற்குள் பணிகள் முடிவுற்று 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருக்கும் விதமாக அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும், அவர் தெருவித்தார்.மேலும் இதய தெய்வ புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் முத்துப்பேட்டையை முன்மாதிரி நகரமாக மாற்றி காட்டுவேன் என உறுதிபட கூறினார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ்,EK .முனவ்வர் கான்,ASNS .அப்துல் பாரி.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)