முத்துப்பேட்டை, அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மரைக்காயர் தெருவில் உள்ள கொத்பா பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வாயில் வருகின்ற ஹிஜ்ரி - 1432 துல்ஹாஜ் மாதம் 7 ஆம் தேதி அன்று அதாவது ஆங்கில மாதத்தின் கணக்குப் படி 04 .11 .2011 ஆம் தேதியன்று திறப்பதாக பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவித்தார்கள்.ஆனால் இந்த பள்ளிவாயில் திறப்பதற்கு 1 அல்லது 2 மாதங்களாகும் என்று பள்ளியின் நிர்வாகத்தினர் சென்ற (குட்டியார் பள்ளியில் நடைபெற்ற) ஜும்மாவில் தெரிவித்தார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள், மேலே குறிப்பிட்ட தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என்ற அடிப்படையில் தான் நாங்கள் அந்த தேதியை தேர்வு செய்து வெளியிட்டோம் என்றும், ஆனால் இன்னும் கொஞ்சம் சிறிய வேலைகள் இருப்பதால் அவற்றை முழுமை படுத்தி திறந்தாள் மிக சிறப்பாக இருக்கும் என்று எண்ணி தேதியை மாற்றியுள்ளோம் என்றும், மேலும் பள்ளி திறப்பு விழாவின் தேதியை விரைவில் இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.
குறிப்பு: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இன்னும் கொஞ்சம் வேலைகள் இருப்பதால் அவற்றிருக்கு நிதி உதவிகளை வழங்கி அல்லாஹ்வின் பேரருளை பெறுங்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com,www.muthupettaiexpress.com
மேலும் தொடர்புக்கு:
MKN. MOHAMED MOHAIDEEN,
IOB BANK, A/C,NO: 3456,
MUTHUPETTAI BRANCH,
MOBILE NUMBER: +0091 - 94871 03980.
இப்படிக்கு கொத்பா பள்ளி நிர்வாகம்.
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான், அபு மர்வா
முத்துப்பேட்டை கொத்பா பள்ளியின் திறப்பு விழா தேதி மாற்றம்!
Subscribe to:
Post Comments (Atom)
Why will be the Delay again, just postpone the MINAARA work and open SOON.
ReplyDeletefor your informational
ReplyDelete