சென்னை, நவம்பர் 01 : ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது.இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள்,பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல் போன் இணைப்பு பெறவும்,இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் திரு.ரமேஷ்ராம் மிஸ்ரா, நவம்பர் 1ம் தேதி இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவம்பர் 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும். மேலும், நவம்பர் 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும்,அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக,பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.source from www.muthupettaiexpress.blogspot.com
இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
அபு மர்வா
ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment