முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் குர்பானி கொடுப்பதற்காக குவிக்கப்பட்ட ஆடுகளும்,மாடுகளும்!




முத்துப்பேட்டை,நவம்பர் 02 : உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இன்னும் சில நாட்களுக்குள் வர இருக்கின்ற தியாகத் திருநாளாம் (ஹஜ்ஜு பெருநாளை) முன்னிட்டு இஸ்லாமியர்கள் நபி இபுராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதத்தில் இறைவன் ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றை அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு அறுத்து பலி இடுங்கள் என்று அனைத்து இஸ்லாமியர்களுக்கு இறைவன் தன் திருமறையான குர்ஆனில் கட்டளை இட்டுள்ளான். இது குறித்து "அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓராண்டு பூர்த்தியான ஆட்டையே அறுத்துக் குர்பானி கொண்டுங்கள். அது கிடைக்காவிட்டால், செம்மறியாட்டில் (ஆறு மாதத்திற்கு மேல்) ஒரு வயதுக்குட்பட்டதை அறுத்துக் குர்பானி கொடுங்கள்" நூல் முஸ்லிம்: 3971 . மேலும், "(ஹஜ் பெருநாளன்று) தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அருத்துவிட்டவர், அதனிடத்தில் (அதற்குப் பதிலாக) வேறொன்றை (தௌளுகைக்குப் பின்) அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் முஸ்லிம்: 3961 இந்த நபி மொழிகளை பின்பற்றும் விதத்தில் அனைத்து உலக இஸ்லாமியர்கள் வருடம், வருடம் ஹஜ் பெருநாள் அன்று ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவன் பெயரைக் கொண்டு அறுத்து அந்த கறிகளை ஏழை, எளிய மக்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் கொடுப்பார்கள். ஆகா இவற்றை முத்துப்பேட்டை மக்கள் நிறைவேற்றும் விதமாக இந்த ஆண்டு அதிகமான ஆடுகள் மற்றும் மாடுகள் ஆகியவற்றை முத்துப்பேட்டைக்கு வியாபாரிகள் இறக்குமதி செய்துள்ளார்கள். ஒரு ஆட்டின் விலை சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பில் 8 மாடுகள் கூட்டு குர்பானி கொடுப்பதற்கு வாங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு பங்கின் விலை ரூ: 1 ,200 ஆகும். மேலும் இந்த கூட்டு குர்பானி திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மூலம் தாங்கள் விரும்பும் பங்கினை கேட்டு பெறலாம். இந்த கூட்டு குர்பானியை நிறைவேற்றும் விதமாக வருகிற ஹஜ் பெருநாள் 07 .11 .2011 ஆம் தேதி அன்று சரியாக 10 மணியளவில் நமதூர் மஜிதியா தெருவில் உள்ள ஒரு காலனியில் கொடுக்கப்படும் என்றும் எனவே முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களும் கலந்து கொண்டு குர்பானி கறியை பெற்றுச் செல்லுமாறும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
மேலும் தொடர்புக்கு:

செல்லவாப்பா: 87600 07814 , முஹம்மது ரஃபீக்: 89734 36487
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com.

நமது நிருபர்

MRS .அஹமத் ராவுத்தர் (கேம்ப் துபாய்)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)