முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!



முத்துப்பேட்டை,நவம்பர் 14 : முத்துப்பேட்டையில் உள்ள மாற்று திறநாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு, தாங்கள் பள்ளி படிப்பை முடித்து விட்டு மேற்படிப்புக்கு செல்ல வாகன வசதி இல்லாதவர்களா, உடனே நீங்கள் நமது திருவாரூர் மாவட்ட ஆட்சியாளரிடம் சென்று தங்களின் மனுவை கொடுங்கள். இந்த மனு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். தாங்கள் எழுதி கொடுக்க வேண்டிய விபரம்:

அனுப்புனர்:
உங்களுடைய பெயர் மற்றும் முகவரி.

பெறுனர்:
திருவாரூர் மாவட்ட ஆட்சியர், அவர்கள்
திருவாரூர்.

பொருள்:
மூன்று சக்கர வாகன பைக் வேண்டி

அய்யா:
நான் தற்போது ----------- படித்து வருகிறேன். அல்லது வேலை பார்த்து வருகிறேன், எனவே இந்த பணிகளுக்கு என்னால் சரிவர செல்ல போது மான வாகன வசதி இல்லை எனவே எனக்கு இந்த மூன்று சக்கர வாகன பைக்கை அளிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். (இதில் தங்களுடைய குடும்ப சூழ்நிலையையும் குறிப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்). இத்துடன் தாங்கள் படித்த மேற்படிப்பின் கல்விச் சான்று , பதிப்பெண் சான்று, குடும்ப அட்டை, மேலும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ. ஆகியவைகளை இணைத்துக் கொடுக்கவும்.

Place :
Date :
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

பாலா (அலங்காடு)

1 comments:

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)