முத்துப்பேட்டை, நவம்பர் 14: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகரில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கோரையாற்றில் ஒரு பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்களுக்கு செய்திகள் வந்ததையடுத்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான ஆண் பிணம் அங்கு கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் அந்த பிணத்தை த.மு.மு.க .வின் நகர தலைவர் ஜனாப். M.சம்சுதீன், த.மு.மு.க .வின் நகர பொருளாளர் ஜனாப். S.ஜெஹபர் சாதிக் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஜனாப் .A .அன்சாரி, TNTJ உறுப்பினர்.ஜனாப்.பசூல் ரஹ்மான் ஆகியோர் ஜனாஸாவை கைப்பற்றி தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்சின் மூலம் பள்ளிவாசலுக்கு கொண்டு வந்தனர். அப்போது பிணத்தின் உறவினர்கள் யார் என்று தெரியாமல் இருந்ததால் மேலும் இவர் முஸ்லிம் மதத்தை சேர்த்தவர் என்று தெரிந்த காரணத்தால் போலீசார் அனுமதியுடன் ஜனாஸாவை ஆசாத் நகர் முகைதீன் பள்ளி மையவாடியில் இன்று மாலை அப்பகுதி மக்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான்.
முத்துப்பேட்டையில் அடையாளம் தெரியாத 70 வயது பெரியவர் ஆற்றில் மூழ்கி சாவு!!
Subscribe to:
Post Comments (Atom)
assalamu alikum, namathoor nanbargal idilavthu , otturumai kattinargale santhosam
ReplyDeleteAllahvidam Duwa seyyungal men melum otrumai endra kaitrai naam anaivarum patri pidippatharkku
ReplyDelete