முத்துப்பேட்டை, நவம்பர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 200 ஆண்டுகள் அனுபவித்து வந்த ASN வார சந்தையை முன்னால் தி.மு.க. பேரூராட்சி மன்ற தலைவர் திரு. MS . கார்த்திக் அவர்களின் தூண்டுதலின் பேரில் நிலத்திற்கு சொந்தக்காரவர்களின் எந்த முன்னரிவிப்பும் இல்லமால் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அவர்களுடைய சொத்தை அபகரித்து உழவர் சந்தை கட்டிடத்தை கட்டிவிட்டார். மேலும் இந்த நிலத்தை திரும்ப பெற்று தரக்கோரி, நிலத்தின் உரிமையாளர் ஜனாப்.ASNM .பசீர் அஹமத் அவர்கள் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் தெரிவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் ஜனாப்.ASNM .பசீர் அஹமத் அவர்களை நேரில் சந்தித்து இது பற்றி விளக்கம் கேட்டார். இதன் பின்னர் பதிலளித்த அவர்,ASN . என்ற வார சந்தையை நாங்கள் வேற நபரிடம் விற்பதற்காக எண்ணி நாங்கள் அவர்களிடம் அட்வான்ஸ் வாங்கி இருந்தோம், ஆனால் அதை விற்க உடாமல் தடுத்து நான் சொல்லும் நபரிடம் தான் நீங்கள் உங்க சந்தையை விர்க்கனும் என்று முன்னால் தி.மு.க. பேரூராட்சி மன்ற தலைவர் திரு. MS . கார்த்திக் கூறினார். அதற்க்கு நாங்கள் மறுப்புத் தெரிவித்தோம், இதற்க்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் எனக்கு 5 லட்சம் பணம் தாருங்கள் என்றும் ஏனெனில் என்னை சார்ந்தவர்களுக்கும் நான் பணத்தை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டார். ASN வார சந்தையை நாங்கள் 3 தலைமுறையாக பயன்படுத்தி வருகிறோம் என்றும், மேலும் இதற்காக முத்துப்பேட்டை பேரூராட்சியில் உரிமம் பெற்று தான் நடத்தி வருகிறோம் என்றும், நாங்கள் ஏன் உங்களுக்கு பணம் தர வேண்டும், இது எங்களின் பரம்பரை சொத்து என்றும், மேலும் ASN சந்தையில் உள்ள பாதி நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதாரத்துடன் விற்றுள்ளோம் என்றும், திரு. கார்த்திக் அவர்களிடம் கூறினேன். இதனால் ஆத்திரம் அடைந்த திரு. MS . கார்த்திக் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தின் மூலம் இவற்றை துஸ்பிரயோகம் செய்து கலெக்டர், தாசில்தார், வருவாய் அதிகாரி, ஆகியவர்களின் உதவியோடு இந்த சொத்தை கொள்ளையடித்து விட்டார் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கும் நான் ஒரு புகார் மனு அனுப்பி உள்ளேன். அந்த புகாரின் விபரம் கீழ் வருமாறு:
எங்கள் பரம்பரை சொத்தை முந்தைய அரசின் (தி.மு.க) வின் துணை முதல் அமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தூண்டுதலின் பேரில் அபகரிப்பு செய்து உழவர் சந்தை மற்றும் வார சந்தை அமைத்து எங்களுக்கு எந்த நஷ்டஈடும் தராமல் மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி கொள்ளை அடித்த அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் வேண்டுகிறேன். தற்போது தங்களுடைய நல்லாட்சியில் அபகரிக்கப் பட்ட நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி ஒப்படைக்கப்டுகின்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தங்களுடைய ஆட்சியில் எங்களுடைய ஆட்சியில் மீண்டும் பழைய நிலைக்கு மாற தாங்கள் உடன் நடவடிக்கை எடுத்து எங்களின் நிலத்தை மேட்டுத் தர வேண்டுமாய் அல்லாத பட்சத்தில் எங்களுக்கு உரிய இழப்பீடு தொகை தற்போதைய மார்கெட் நிலவரப்படி கிடைக்க ஆவன செய்ய வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறேன்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK ,முனவ்வர் கான்,அபு மர்வா.
முத்துப்பேட்டை சந்தை அபகரிப்பு MS .கார்த்திக் மீது ASNM . பசீர் அஹ்மத் வழக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
இபோதான் தய்ரியம் வந்தா ??? அல்லா நன்மையா தரடும்
ReplyDelete