அதிராம்பட்டினம் நவம்பர் 16 : அதிராம்பட்டினம் போன்ற ஊர்களுக்கு வெகு விரைவில் 3G என்ற அதி நவீன மொபைல் வசதி வர இருக்கிறது. இதனால் நம் சமுதாயத்திற்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது? இதனால் என்ன தீமை உருவாகும் என்பதை குறித்து "adirai fact " என்ற இணையத்தளம் ஓர் அறிவு சார்ந்த அலசலில் இறங்கயுள்ளது . 2G என்ற ஊழல் பிரச்சனை நம் இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தலை கீழ் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதை நாம் மறந்திட முடியாது. ஆனால் 2G வரவால் சமுதாய சீர்கேடு ஏற்பட்டு விடவில்லை. (சில ஆயிரம் கோடிகள் இழப்பீடு ஏற்பட்டதை தவிர ) ஆனால் 3G அறிமுகத்தால் பெரியதொரு சமுதாய சீரழிவு ஏற்பட மிகப்பெரியதொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 3G மொபைல் நெட்வொர்க் மூலம் அதிவேக இன்டர்நெட் உபயோகப்படுத்தலாம் வீடியோ மற்றும் புகைப்படங்களை நொடியில் உலகில் எந்த மூளைக்கும் அனுப்பிவிடலாம். இவை எல்லாம் பெரிய விசயமல்ல. 3G மூலம் வீடியோ டெலிபோன் தான் மிகப்பெரிய பிரச்சனை உருவெடுக்கக் காத்திருக்கிறது. உங்கள் வீட்டு ஜன்னால் கதவை திறக்காமலேயே அந்நிய நபருடன் வீடியோ போன் மூலம் உரையாடலாம். அந்நியன் எங்கிருந்தாலும் இதற்க்கு வாய்ப்புகள் அதிகம். இதில் மிகக் கேடான விஷயம் என்னவெனில், மறு முனையில் உள்ளவர் இந்த உரையாடல் நிகழ்வுகளைப் பதிவு செய்யலாம். இந்தப் பதிவை வைத்து ப்ளாக் மெயில் செய்ய வாய்ப்புள்ளது. வருபுன் காப்போம் (Prevention is better than cure) என்ற கூற்றின்படி தாய் தந்தையர் தன் பிள்ளைகளுக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு கேமரா போன் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மொபைல் போனில் வீடியோ, புகைப்படங்கள் என்னனென்ன இருக்கிறது என்பதை அவ்வப்போது நோட்டமிடுதல் மிகவும் அவசியமானது.தாய் தந்தையர் தன் பிள்ளைகளுடன் மனம் விட்டு இதன் தீமைகளை விளக்கிக் கூறினாலே, பிள்ளைகள் தங்களை தாங்களே இவ்வித சூழ்நிலைகளிலிருந்து பாது காத்துக் கொள்வார்கள். "ஒரு தீமையிலும், ஒரு நன்மை உண்டு, புயல் மையம் கொண்டால் மலை மண்ணில் விழும், என்ற தத்துவப் பாடலின்படி , இதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் அன்பர்கள் தகங்கள் உறவினர்களுடன் மனமார உரையாடலாம். தங்கள் வீட்டின் விசேச நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பாகக் கண்டுகளிக்கலாம். வீட்டு கட்டுமானப் பணிகளைப் பார்வை யிடலாம் அவசர கால நிகல்ட்சிகலையும் டிவி நிலையங்களுடன் இணைந்து ஒலிபரப்பு செய்யலாம். மாணவர்கள் கல்வி கற்க "vidioconfrence " முறையில் இந்த வசதிகளைப் பயன்படித்தி மேற்படிப்பு படிக்கலாம். குடும்ப நல மருத்துவருடன் தொடர்பு கொண்டு மருத்துவ உதவி பெறலாம். 3G கட்டணம் மாதம் ரூ. 1500 வரை மொபைல் கம்பெனிகள் நிர்ணயித்துள்ளன. நாம் அந்தரங்க விஷயங்கள் வெளி யில் போகாதவரை இவை எல்லாம் நன்மை பயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நம் சமுதாயத்தை அறிவியல் ரீதியாக தகர்க்க வரும் இதுபோன்ற டெக்னாலாஜி ஊடுருவலை உன்னிப்பாகக் கண்காணிக்கத் தயாராகுங்கள். அறிவியலை வரவேற்போம், அறிவியல் என்ற போர்வையில் சமுதாயச் சீர்கேட்டை தடுத்திடுவோம் .
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். அபு மர்வா.
நன்றி - www.adiraifact.blogspot.com
3G அலைவரிசை ஓர் எச்சரிக்கை! இது குறித்த ஓர் பார்வை!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment