முத்துப்பேட்டை, டிசம்பர் 01 : இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அண்ணிய முதலீட்டில் 50 சதவீதத்தை உயர்த்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது. எனினினும் இவற்றை ஆதரித்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வர்த்தக சங்கங்கள் சார்பில் கடைகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துப்பேட்டை நகர வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. கோ. அருணாச்சலம் அவர்கள், இந்தியாவில் உள்ள அனைத்து சில்லரை வணிகத்தில் அண்ணிய முதலீட்டை 50 சதவீதம் திணிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும், எனவே முத்துப்பேட்டையில் உள்ள வர்த்தக சங்கம், வர்த்தக கழகம், பெரிய கடைத்தெரு வர்த்தக சங்கம் ஆகிய மூன்றும் சேர்ந்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து அண்ணிய முதலீட்டை உடனே தடுத்து நிறுத்த இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா
அண்ணிய முதலீட்டை இந்தியாவிற்குள் விட மாட்டோம் வர்த்தக சங்கங்கள் போர்க்கொடி!
Subscribe to:
Post Comments (Atom)
thanks
ReplyDelete