முத்துப்பேட்டை, டிசம்பர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள கொத்பா பள்ளி வாசல் திறப்பு விழா வருகிற 30 .12 .2011 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக கொத்பா பள்ளி நிர்வாகிகள் அறிவித்துள்ளார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த முத்துப்பேட்டை கொத்பா பள்ளி நிர்மான கமிட்டி செயலர் ஜனாப். MKN . முஹம்மது முஹைதீன் அவர்கள், இந்த பள்ளியை சென்ற மாதம் 04 .11 .2011 ஆம் தேதியே திறக்க இருந்ததாகவும், ஆனால் பள்ளிவாசலின் வேலைகள் முடிவு பெறாமல் இருந்ததின் காரணத்தால் ஒரு மாதம் காலதாமதம் செய்திருந்தோம் என்றும், தற்போது அனைத்து வேலைகளும் முடிவு பெரும் விதத்தில் இருந்து வருவதால் இன்ஷா அல்லாஹ் வருகிற 30 .12 .2011 ஆம் தேதி அன்று பள்ளியை திறக்க இருக்கிறோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். எனவே இப்பள்ளி திறப்பு விழாவிற்கு அனைத்து ஊர் மக்களும் மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜமாஅத் பள்ளி தலைவர்களும், மற்றும் பொது மக்களும் தவறாமல் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா
கொத்பா பள்ளி 30 .12 .2011 திறப்பு, நிர்மான கமிட்டி செயலர் MKN முஹம்மது முஹைதீன் பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment