முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை குத்பா பள்ளி திறப்பு விழா சிறப்பு மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன..


முத்துப்பேட்டை,டிசம்பர் 03 : அன்பார்ந்த வெளிநாட்டு வாழ் முத்துப்பேட்டை சகோதரர்களே.. நமதூர் குத்பா பள்ளிவாசலானது மறு சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ்.. வரும் 30.12.11 வெள்ளிக்கிழமை (ஹிஜ்ரி 1433 ஸஃபர் பிறை 4 ல்) திறப்பு விழா காண உள்ளது.இந்த திறப்பு விழாவினை முன்னிட்டு, சிறப்பு மலர் ஒன்றினை வெளியிட குத்பா பள்ளி திறப்பு விழா கமிட்டியானது முடிவு செய்துள்ளது. கமிட்டியின் ஆலோசனைக்கூட்டமானது இன்று காலை 11 மணியளவில் குத்பா பள்ளியில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் ஹாஜி முஹம்மது முஹைதீன் அவர்கள் - (குத்பா பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர்), ஹாஜி MA. இப்னு ஹமீது (குத்பா பள்ளி நிர்மான கமிட்டி துணைச் செயலாளர்), அனைத்து முஹல்லா முன்னாள் தலைவர் ஜனாப்.MKN. முஹம்மது முஹைதீன் அவர்களும், எம்.கே.எம்.ஜபருல்லா (நிர்வாக கமிட்டி - செயலாளர்) மற்றும் பிறரும் கலந்துக்கொண்டனர்.
திறப்பு விழா மலருக்கு தாங்களின் வாழ்த்துக்கள், நிறுவனத்தின் விளம்பரங்கள், கடை விளம்பரங்கள், இஸ்லாம் சம்மந்தமான கட்டுரைகள், மற்றும் ஏனைய செய்திகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். (வசதி இருந்தால் விளம்பரங்களை தாங்களே டிசைன் செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம்).
வெளி நாட்டில் உள்ள முத்துப்பேட்டை வாழ் சகோதரர்கள் மட்டுமின்றி பிற ஊர் சகோதரர்களும் தாங்களுடைய வாழ்த்துக்கள், விளம்பரங்கள், கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். (கட்டுரைகள் யுனிகோட் பாண்ட் வடிவில் இருந்தல் அவசியம். அனைத்து படைப்புகளும் எங்களுக்கு 10.12.11 அன்றுக்குள் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளவும்)

மின்னஞ்சல் முகவரி : advtmtt@gmail.com

குறிப்பு:

சிறப்பு மலருக்கான விளம்பர விவரமானது: (இந்திய ரூபாய் மதிப்பில்)

முழு பக்கம் : ரூ. 1500
அரை பக்கம் : ரூ. 750
கால் பக்கம் : ரூ. 300

சிறப்பு மலர் விழாக்குழுவினர்கள்:

1. பி.எம். ஜாகிர் உசேன் - (முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம்)
2. ஹாஜி. கே. எம். நெய்னா முஹம்மது (சோழ நாடு)
3. ஹாஜி. எம். முகம்மது அலி ( செயலாளர் - குட்டியார் பள்ளி)
4. எம்.கே.என். நிஜாம் முஹம்மது ( கொத்பா பள்ளி - செயற்குழு)
5. ஈ.கே. ஹபீப் முஹம்மது - புதுத்தெரு

நன்றி - முத்துப்பேட்டை ஆர்க் - அபு ஆஃப்ரின்

நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து
நிற்கிறார்களோ, அவர்க்ளுக்கு பயமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.( குர்ஆன் 46:13)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)