முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தேசத்தை நீதியால் கட்டமைப்போம், PFI - யின் மாநில தலைவர் AS. இஸ்மாயில் அவர்கள் பேட்டி...




சென்னை, நவம்பர் 22: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வருகிற நவம்பர் 26 , 27 ஆகிய தேதிகளில் "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற முழக்கத்தோடு சமூக நீதி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளதாக இயக்கத்தின் தமிழ் மாநில தலைவர் ஜனாப்.AS .இஸ்மாயில் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிரூபர் நேரில் சென்று கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த PFI யின் மாநிலத் தலைவர் ஜனாப். AS .இஸ்மாயில் அவர்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கடந்த 22 ஆண்டுகளாக "சமூகத்தின் பாதுகாப்பு" என்ற தலைப்பில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர, கர்நாடக ஆகிய மாநிலங்களின் மூலம் தொடர்ந்து பறந்து, விரிந்து செல்லக்கூடிய சூழ்நிலையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான் என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அரசியல்வாதிகளிடமும், ஃபாசிஸ சக்திகளிடமும் விழிப்புணர்வு அடைந்துவிட்டனர் என்றும், ஆனால் வடமாநிலத்தில் உள்ள மக்கள் யாவரும் மிகப்பெரிய பலகீனமானவர்கலாகவும், தன்னம்பிக்கையற்றவர்கலாகவும், மற்றும் எல்லா தவறுகளையும் யோசிக்காமல் சருவ சாதாரணமாக செய்யும் ஓர் அவல நிலையில்தான் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள் என்றும், எனவே ஒட்டுமொத்த வடநாட்டு மக்களை ஓரணியில் ஒன்று திரட்டி அவர்களுக்கு அச்சத்தை அகற்றவும், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த மாநாட்டை பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா டெல்லியில் நடத்த முடிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பத்திரிக்கைத்துறை, காவல்துறை, நீதித்துறை, மற்றும் சினிமாத்துறை ஆகிய அனைத்து துறைகளிலும் இஸ்லாமியர்கள் தாக்கபடுவதும், மேலும் இவற்றைக்கொண்டு இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் தான் சித்தரிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா 2007 ஆம் ஆண்டு பெங்களூரில் நடத்திய "வலிமையான இந்தியாவை உருவாக்க" மாநாடு, மற்றும் 2009 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் நடத்திய "தேசிய அரசியல் மாநாடு" ஆகியவை ஒதுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்றும், நமது நாட்டின் தேசிய தலைநகரில் நடத்தப்படவுள்ள இந்த சமூக நீதி மாநாடு அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்களை கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். அப்போது விடியல் வெள்ளி மாத இதழின் துணை ஆசிரியரும், PFI யின் தமிழ் மாநில துணைத் தலைவருமான M .முஹம்மது இஸ்மாயில் அவர்களும் உடனிருந்தார்...

மேலும் நடைபெற உள்ள சமூக எழுச்சி மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் அதிகமான வரவேற்புகள் வந்த வண்ணம் உள்ளன, எனினும் முத்துப்பேட்டையில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் தொண்டர்கள் அதிகமான சுவர் விளம்பரம் மற்றும் கட்டவுட் ஆகியவைகளை முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வைத்து வருகின்றனர்.



இதனைத் தொடர்ந்து நேர்மையாக நடந்து கொள்ளும் முஸ்லிம் பத்திரிக்கையாளர்களை அழைத்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நடத்தவுள்ள சமூக எழுச்சி மாநாடு குறித்து இயக்கத்தின் தமிழ் மாநில தலைவர் ஜனாப். AS .இஸ்மாயில் சாஹிப் அவர்கள் விளக்கம் அளித்தார்




இந்தியவில் தற்போதைய இஸ்லாமியர்களின் நிலமை உங்களின் பார்வைக்கு:

1 ) கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பாதுகாப்பு, சொத்து, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் இஸ்லாமியர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.
2 ) நீதிபதி இராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கை, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அறிக்கை ஆகியவை அதிகமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் இவை அனைத்தும் சமுதாயத்தின் பின் தங்கிய நிலை குறித்து பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தபடுகின்றன.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.EK .முனவ்வர் கான்

1 comments:

  1. முத்துப்பேட்டை எக்ஸ்ப்ரெஸ் குழுமத்திற்கு பாராட்டுக்கள்...
    மாஷாஅல்லாஹ் சமுதாயத்தின் பல நிகழ்வுகளை துல்லியமாக வெளிக்கொணரும்
    தங்களின் முயற்சிகளுக்கு அல்லாஹு எல்லாவிதமான உதவிகளையும் செய்திட
    மனதார துஆச் செய்கிறேன்...

    நாம் வலுவிழந்துள்ள முக்கியமான துறை ஊடகத்துறை இன்றைக்கு அனைத்து இஸ்லாமிய
    ஊர்களின் அடையாளத்திலும் உலக நடப்புகளில் தவிர்க்கமுடியாத இணையதளம்... மகிழ்ச்சியான
    முன்னுதாரணம்... அதிலும் முத்துப்பேட்டை எக்ஸ்ப்ரெஸ் தனித்தன்மையுடன் நடுநிலையுடன்
    பங்காற்றுவது வாழ்த்துகளுக்கு உரியது...

    சகோதரர்களே பல இயக்கங்கள் செய்ய இயலாத காரியங்களை நாம் ஊடகதின்மூலமாக
    நிறைவேற்றிட முடியும்... எழுத்து எத்துனை பெரிய கனவான்களையும் கடிவாளமிட்டு கட்டிபோடும்
    வல்லமை கொண்டது... அதனை முறையாக நாம் கையாண்டால் எதிர்கால சமுதாயம் இன்பமுறும்...
    இன்ஷாஅல்லாஹ்
    மகிழ்வுடன்
    சமுதாய சகோதரன்
    வேங்கை.சு.செ.இப்ராஹீம்

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)