முத்துப்பேட்டை, நவம்பர் 22: முத்துப்பேட்டையில் திருமணமாகி 4 மாதமே ஆன புதுப்பெண் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி வயது (25 ) இவர்களுக்கு திருமணமாகி 4 மாதமாகிறது. இவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி முத்துப்பேட்டை அடுத்து தம்பிக்கோட்டை கீழ்க்காட்டில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்துவிடுவார். கடந்த 19 ம் தேதி காலை சதீஸ்குமார் மனைவி பரமேஸ்வரியை தந்தை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றார். அதன் பின் பரமேஸ்வரி அருகே உள்ள பாமணி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். முத்துப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவளர் திரு கண்ணன் அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் முழுவதும் ஆற்றில் இவரது உடலை தேடினர். இந்நிலையில், நேற்று பாமணி ஆற்றில் கரை ஒதுங்கிய பரமேஸ்வரியின் உடலை முத்துப்பேட்டை போலீசார் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து, வி ஏ ஓ கமலதியாகராஜன் கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமேஸ்வரிக்கு திருமணமாகி 4 மாதமே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தார என்பது குறித்து மன்னார்குடி ஆர். டி. ஓ. திரு. செல்வராஜ் விசாரணை செய்து வருகிறார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK.முனவ்வர் கான், AKL . அப்துல் ரஹ்மான், அபு மர்வா
முத்துப்பேட்டையில் புதுப்பெண் ஆற்றில் விழுந்து தற்கொலை!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment