முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவும் நடந்து முடிந்த நிகழ்சிகளும். ஓர் பார்வை...

















முத்துபேட்டை,டிசம்பர் 31 : முத்துபேட்டையில் பல கோடி ரூபாய் பதிப்பீட்டில் கட்டப்பட்ட நமதூர் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் நிர்மான கமிட்டி தலைவர் தலைமை வகித்தார், நிர்மான கமிட்டி செயலர் ஹாஜி.ஜனாப். MKN .முஹம்மது முஹைதீன் வரவேற்று பேசினார், பிரிலியன்ட் பள்ளி தாளாளர் ஜனாப். முஹம்மது யாகூப் தொகுப்புரையாற்றினார், பிரபல தொழிலதிபர்களான ஜனாப். தஞ்சாவூர் L .கமால் பாட்சா, ஜனாப். MA .யாகூப், ஜனாப். MA . தமீம், ஜனாப். சென்னை MN . ஜெக்கரிய்ய, ஹாஜி. ஜனாப். வக்கீல் சலீம் கான், நிர்வாகிகள், AK . அஹ்மத் ஹுசைன், ANM.நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திறப்பு விழாமலரை MA .முஹம்மது யாகூப் வெளியிட அல்மஹா அறக்கட்டளையின் நிறுவனர் ஜனாப். SM .ஹைதர் அலி பெற்றுக்கொண்டார். பள்ளியின் செயலாளர் ஜனாப். MKN . ஜெகபர் அலி துவக்க உரையாற்றினார், சென்னை மதரசாயே நிஸ்வான் முதல்வர் KM . முஹம்மது யூசுப் ரஸ்ஸாதி,சேலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி பேராசிரியர் M .முஹம்மது அபுதாகிர் பாசில் பாக்கவி, சிறப்புரையாற்றினார்கள். முத்துப்பேட்டையை சேர்ந்த வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது. முத்துப்பேட்டை நகரம் என்பது ஓர் வரலாறு படைத்த சிறந்த ஊர் என்றும், இங்கு சமுதாய சிந்தனையாளர், நற்குனமுடயவர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்றும்,மேலும் இந்த மண்ணின் சொந்தங்கள் வரலலற்றில் சிறப்படைந்தவர்கலாக உலகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஊரில் ஒருஒருக்கொருவன் அண்ணன் தம்மியாக வாழ்ந்து வருவது மிக மகிழ்ச்சியை தருகிறது. மேலும் பள்ளிவாசல் தூய்மை படுத்தப்பட்ட தொழுகை கூடம் மட்டுமல்ல என்றும், சமுதாயத்தில் நல்ல உள்ளம் படைத்தவர்களாகவும், நல்ல திறன் படைத்தவர்களாகவும், நாளைய சமுதாய இளைஞர்களை உருவாக்காத்தான் பயன்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். தொழுகை என்பது இஸ்லாத்தின் அவசியமான ஒன்றாகும். இது குறித்து நான் ஒருமுறை பாராளுமன்றத்தில் பிற நாட்டு விமான நிலையங்களில் பிற நாடுகளை போன்று இஸ்லாமியர்கள் இல்லாத நாடுகளை போன்று தொழுவதற்கு ஒரு இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தேன். அப்போது பதிலளித்த மத்திய அமைச்சர் பிராஸ் பட்டேல் மிகவும் ஓப்பனாக தொழுவத்துக்கு இடம் கொடுத்தால் இந்துக்களும் மற்ற சமுதாயத்தவரும் அவரவருக்கு இடம் வேண்டும் என்று கேட்பார்கள் இதனால் விமான நிலையத்தில் விமானம் இறங்க இடமே இருக்காது என்று அவர் தெரிவித்தார். அப்போது நான் மற்ற சமுதாயத்தில் உள்ள வணக்கம் போல இஸ்லாத்தில் இல்லை என்றும், சரியான நேரத்தில் ஒவ்வொரு தொழுகையை தொழவேண்டும் என்றும், விமானம் விட்டு விமானம் மாறும் போதும் சரியான நேரத்திகுள் விமானம் வந்து செல்லும் போதும் அதனை பயன் படுத்திகொள்ளலாம். என்றும் நேரம் தவறினால் அந்த தொழுகையையும் தவறிவிடும் அதனால் தன நான் இவ்வாறு கேட்கிறேன் என்றும் கூறினேன். தோலும் இடத்தில் சிலை தேவை இல்லை, குர் ஆனை அடுக்கி வைக்க தேவை இல்லை, பிறை கோடி போன்ற எதுவும் தேவை இல்லை, எங்களுக்கு தேவை ஓர் தூய்மையான இடம் தான் இறைவனை நினைத்து மனதில் நாங்கள் வணங்குவோம் என்றேன். எனவே விமான நிலையத்தில் ஓர் சிறிய இடம் கொடுத்தால் போதும் என்றேன். இது குறித்து அந்த அமைச்சர் கூறும் பொது இது வரைக்கும் எந்த ஒரு இஸ்லாமிய சகோதரரும் என்னிடம் தொழுகையைப் பற்றி கூறியது இல்லை தொளுகைபற்றி நீங்கள் எனக்கு புரியவைத்ததற்கு மிக நன்றி என்றும் அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் டெல்லி விமான நிலையத்தில் இந்தியாவிலே முதன் முதலில் அமைத்து தந்தார் இவ்வாறு இந்த அமைச்சர் தெரிவித்தார். பின்னர் பல்லாயிரக்கனக்கான இஸ்லாமியர்கள் குத்பா பள்ளி ஜும்மாஹ் தொழுகையில் கலந்து கொண்டனர். இதன் பின்பு சாப்பாடு பொட்டணம் வழங்கப்பட்டன. இந்த முன்னாள் நாள் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)