முத்துப்பேட்டை, ஜனவரி 06 : முத்துப்பேட்டை கிட்டங்கித் தெருவில் உள்ள மதினாப்பள்ளி வாசல் எதிரில் குப்பை கூலங்களும், அசுத்தங்களும் நிரம்பிக் கிடக்கின்றது. இதில் மிக முக்கியமாக கோழிக்கடைகளில் உள்ள கோழியின் கழிவுகளை கொட்டுவதிலும், பொதுமக்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதும் இங்கு வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில் பன்றிகள் இங்கு அதிக அளவில் அசுத்தம் செய்து வருகிறது. இதில் ஏற்படக்கூடிய துர்நாற்றம் காரணமாக பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களுக்கு மிகவும் இடையூறாக இருந்து வருகிறது. மேலும் இந்த சுகாதார சீர்கேடுகளால் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கும் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அப்பள்ளி முஹல்லா வாசிகளிடம் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர்கள், இதுகுறித்து எங்க பள்ளிவாசல் முஹல்லா சார்பில் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்த ஓர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்கள், இந்த நிலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கா? அல்லது அதிகார வர்கத்தின் சூழ்ச்சியா? என்பது இந்த முஹல்லா வாசிகளின் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. மேலும் கவுன்சிலர்கள் பதவிக்கு வருமுன் நாங்கள் சுகாதாரத்தை பேணிக்காப்போம் என்று தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். அவ்வாறு வெற்றிபெற்றவர்கள் இப்போது எங்கே சென்றுள்ளார்கள்? இதனால் கிட்டங்கித்தெருவில் உள்ள மதினாப் பள்ளி வாசல் எதிரே உள்ள இடங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை சுத்தம் செய்து பொதுமக்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவார்களா???
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா, யூசுப் அலி
சுகாதார சீர்கேட்டால் சிக்கித் தவிக்கும் மதீனா பள்ளிவாசல்!!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment