முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் மலர் வெளியீடும், பிரபலங்களின் வரவேற்ப்பும்...






முத்துப்பேட்டை,ஜனவரி 05 : நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் திறப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. அந்த மலரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் எக்ஸ்பிரஸ் சார்பில் வழங்கப்பட்டது. இந்த மலரை பெற்ற உடன் நல்ல முறையான வரவேற்ப்பு வந்த வண்ணம் உள்ளது. இது போன்ற சமுதாய சேவையில் முன்னிலை வகிக்கும் உங்கள் இணையதளமான முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு அனைத்து உள்ளங்களும் நல் ஆதரை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களிடம் உள்ள கல்விச் செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள் , அரசியல், உலகம், வளைகுடா, மற்றும் முத்துப்பேட்டை செய்திகளை public.mttexpress@gmail.com எங்களிடம் தாருங்கள் அவற்றை நாங்கள் உலகிற்கு தருகிறோம்.

இப்படிக்கு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்.

6 comments:

  1. அன்பார்ந்த muthupettai express இணையத்தள ஆசிரியர்க்கு..

    தாங்களின் இணையத்தளத்தினை வெகு நாட்களாக பார்க்கும் ஒரு வாசகன் நான்.

    தாங்களின் செய்திகள் மற்றும் தாங்கள் இணையத்தளத்தில் பதியும் புகைப்படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. (இருப்பினும் எழுத்துப்பிழைகள் அதிகமாக உள்ளது... உதாரணத்திற்கு ல..என்பதற்கு பதிலாக ழ என்றும், பள்ளி வாசல் என்று இருப்பதற்கு பதிலாக பள்ளி வசால் என்றும், பிண்ணனி என்பதற்கு பதிலாக பின்னனி என்றும் உள்ளது..கவனிக்கவும்)

    குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவிற்காக தாங்களின் முயற்சியால் மலர் ஒன்றினை வெளியிட்டு இருந்தீர்கள். அறிந்தேன்.. அதே போல் மற்றவர்களும் சிறப்பு மலரினை வெளியிட்டு இருந்தார்கள், ஏன்..? இரண்டு சிறப்பு மலர்கள் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டேன்..!..?..

    தாங்களின் சிறப்பு மலருக்காக அதிக சிரத்தை எடுத்து விளம்பரங்களை வாங்கியுள்ளீர்கள்.. அந்த மலருக்காக தாங்கள் செலவழித்த உடல் உழைப்பினையும், பொருள் உழைப்பினையும் பள்ளி வாசலில் எத்தனையோ பணிகளுக்காக செலவு செய்து இருந்தால் பல நன்மைகள் உங்களையும் உங்கள் குழுவிற்கும் கிடைத்து இருக்கும். தவறவிட்டு விட்டீர்கள்.

    குத்பா பள்ளி வாசல் திறப்பு விழா முதல் நாள் பெண்களுக்கான பயானினும் சாப்பாடு பிரச்சனை, அது போல் திறப்பு விழாவன்றும் சாப்பாடு பிரச்சனை.. தாங்கள் வாங்கிய விளம்பர தொகையினை கொண்டு அந்த பிரச்சனைகளை சமாளித்தது இருக்க வாய்ப்பு இருந்து இருக்கும். கொஞ்சம் யோசனை செய்து இருக்கலாம்.

    மற்றவர்கள் மலர் வெளியிட போகிறார்கள், காலண்டர் வெளியிட போகிறார்கள் என்ற செய்தி தெரிந்தவுடன் நாங்களும் அதனை செய்வோம் என்ற ஆவேசம் உங்களிடம் உள்ளது. அந்த ஆவேசம் அவசர புத்தியாக மாறி விட்டது.

    குத்பா பள்ளி வாசல் திறப்பு விழா நிகழ்ச்சியினை நாங்களும் நேரடி ஒளிப்பரப்பு (Direct Telecast in website) செய்வோம் என்ற செய்தியினை தாங்களின் இணையத்தளத்தில் கண்டேன். ஆனால் மற்றவர்கள் செய்யும் அதே செயலினை நானும் செய்வேன் என்ற ஆதங்கம் உங்கள் மனதிலும் தாங்கள் குழுவினர்களின் மனதிலும் உள்ளது அதனை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் குழப்பங்கள் உள்ள நமதூர் முத்துப்பேட்டையில் இணையத்தளம் வாயிலாக ஒரு குழப்பம் வேண்டாமே.. என்ற ஆசையில்..

    அமீரகத்திலிருந்து
    ஊர் நலனின் அக்கறைக்கொண்ட
    இணையத்தள வாசகன்..

    ReplyDelete
  2. நீங்கள் உண்மையான நேசன் என்றால் தங்களுடைய மின்அஞ்சல் முகவரியிலிருந்து எங்களுக்கு இந்த செய்தியை அனுப்பி வைத்தால் இதற்க்கு நாங்கள் பதில் தருவோம். மொட்ட கடிதம் போல எழுதி அனுப்பும் ஓரு வாசகர் கூட முத்துப்பேட்டை எக்ஸ்ப்ரஸ் இணையதளத்தை பார்வையிட மாட்டார்கள். தாங்கள் அமீரகத்திலிருந்து அனுப்பி வைத்ததாக நீங்கள் கூறியது தவறு. தாங்கள் 3 நாங்களுக்கு முன்புதான் இந்த ரபீக் என்ற பெயரில் மெயில் முகவரியை பொய்யாக தயாரித்து உள்ளீர்கள் அதும் தங்களுடைய IP Adress மூலம் எங்களுக்கு தெரியவருகிறது. நீங்கள் அமீரகம் என்று கூறி இதை ஏன் சிங்கபூரிலிருந்து அனுப்பி உள்ளீர்கள்.

    இப்படிக்கு

    MAK. Hithaayathullah.
    dubaai
    cell number : 0097150 2146676

    ReplyDelete
  3. அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் !

    முதலில் என்னுடைய வாழ்த்துக்கள் ! முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் மற்றும் குழுவினர்களுக்கு.............................

    தங்களுடைய “ குத்பா பள்ளி திறப்பு விழா - சிறப்பு மலர் “ மிகவும் பயனுள்ளதாகவும் தங்கள் ஊருக்கே பெருமை சேர்க்கும் படியாக அமைந்துள்ளது. இது ஒவ்வொரு ஊரிலும் பள்ளி திறப்பு விழாவின் போதும் வெளியிடக்கூடியதே...............

    மேலும் தாங்களும், தங்கள் குழுவினரும் “ குத்பா பள்ளி திறப்பு விழா “ பணிக்காக இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வந்துள்ளிர்கள்......அல்லாஹ் தங்கள் அனைவருக்கும் நன்மையையும், நற்கிருபையும் செய்வானாக ஆமின் !

    முத்துப்பேட்டையில் உள்ள நமது சகோதர வலைதளங்களில் ஒன்றான தங்களின் வலைத்தளம் குறிகிய காலத்தில் நல்ல வளர்ச்சிப் பெற்று நமது சமுதாய மக்கள்களின் விழிப்புணர்வை தூண்டும் விதமாக நல்ல பல கட்டுரைகளை வெளியீட்டு தங்கள் ஊருக்கே பெருமையை தேடித் தந்துகொண்டு உள்ளிர்கள்.......

    தங்கள் சமுதாயப் பணி தொடர “ அல்லாஹ் “ உதவி புரிவானாக ! ஆமின் !

    அன்புடன்,
    சேக்கனா M. நிஜாம் – அதிரை

    ReplyDelete
  4. சமுதாயப் பணி என்று வரும் பொழுது சில விமர்சனங்கள் வரும் அதை பொருட்படுத்தாமல் தாங்களின் பணியின் முக்கியத்துவம் கருதி தொடருங்கள்..........அல்லாஹ்வின் உதவியுடன்.............


    அன்புடன்,
    சேக்கனா M. நிஜாம் – அதிரை

    ReplyDelete
  5. அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்

    முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் மற்றும் குழுவினர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் !

    தங்களுடைய இணையதளம் மூலம் நமது ஊரில் அன்றாடம் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரியப்படுத்திக் கொண்டு இருக்கும் MUTHUPETTAIEXPRESS விற்கு முதலில் என்னுடைய சலாத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உங்களுடைய இணையதளம் குறுகிய காலத்தில் அனைவரிடமும் நல்ல பெயர் பெற்று உள்ளது.இதை கெடுக்கும் விதத்தில் அவதூறு செய்திகளை இணையத்தில் பதிந்து இருக்கும்.இந்த RAFIQ யார்? இவருடைய முகவரி என்ன?என்பதை தெரிவிக்காமல் அமீரகத்திலிருந்து ஊர் நலனின் அக்கறைக்கொண்ட
    இணையத்தள வாசகன் என்று குறிப்பிட்டு? இருக்கும் இந்த மனிதர் அவருடைய மொபைல் நம்பர் மற்றும் முகவரி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

    தங்களுடைய சமுதாயப் பணி என்று வரும் பொழுது சில விமர்சனங்கள் வரும் அதை பொருட்படுத்தாமல் தாங்களின் பணியின் முக்கியத்துவம் கருதி தொடருங்கள்..

    குறிப்பு :-

    எதற்கு எடுத்தாலும் அமீரகம் என்று பொய் முகவரி இட்டு அமீரகத்தில் உள்ள முத்துபேட்டை வாசிகளின் பெயர்களை களங்கம் கற்பிக்கும் இது போன்ற மனிதர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். இறைவன் நாடினால் ...................

    இப்படிக்கு,

    M.R.S.AHAMED RAWTHER,
    DUBAI,
    MOBILE NO:00971 - 55 2237541.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்.
    அன்பர் ரபீக் அவர்கள் குறை கூறு வதற்கே இங்கே கமெண்ட் பதிவு செய்துள்ளார் .முதலில் குறை கூறுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட விஷயம் என்பதை தெரிந்து கொள்ளட்டும். அடுத்து,வேறு யாரும் மலர் வெளி இடக்கூடாது என்று குத்பா பள்ளியில் நடந்த பொது கூட்டத்தில் யாரும் சொல்ல வில்லை .அந்த மலரை இலவசமாக கொடுத்தது பாராட்ட தக்கது தானே? அடுத்து சப்பட்டு பிரச்சனை.மலர் வெளி இட்டவர்களுக்கும் சாப்பாட்டு பொறுப்பு எடுத்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் ? ஏன் புரியாமல் குழப்புகிரிர் !.பொதுவாக பெரிய பெரிய கூட்டங்களில் சாப்பாட்டு பிரச்சனை வருவது சகஜம் தானே ? அல்லது நீங்கள் சப்பட்டை மட்டும் தான் எதிர்பர்தீர்கள் என்று சொல்வதா ?எனக்கு என்னவோ நீங்கள் யாராலோ ஏவி விடப்பட்ட அம்பு என்று தோன்றுகிறது .கவணமாய் இருங்கள் ......

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)