திருவாரூர், பிப்ரவரி 27 : திருவாரூர் முதல் காரைக்குடி வரை உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதையை கடந்த 31 .12 .2012 அன்று அகல ரயில் பாதையாக மாற்றப்பட வேண்டி கம்பன் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த 6 வருடங்களாகியும் அகல ரயில் பாதைக்கான எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை. தஞ்சை மண்டலத்துக்கு உட்பட்ட 3 பகுதிகளில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு 3 புதிய ரயில் தடம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மயிலாடுதுறை முதல் காரைக்குடி வரை அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்காக 404 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் இன்று வரை இந்த வேலைகளை செய்யாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி SDPI சார்பில் நேற்று திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, இப்போராட்டத்திற்கு தலைமை வகித்த SDPI - யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A .அபூபக்கர் சித்திக் அவர்கள், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக உள்ள ரயில் பாதையை நிரந்தரமாக தடைசெய்யக்கூடிய ரீதியில், திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி, வடச்சேரி, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை அகல ரயில் பாதை அமைக்க கூடிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும், ஒருகால் அப்படி நடந்தேறி விட்டால் இந்த பாதை நிரந்தரமாக விடப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் திருவாரூர் முதல் காரைக்குடி வரை உள்ள அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த SDPI தயாராக உள்ளது என்று அப்போது அவர் தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்
O.M .சுபைத் கான் B.Tech. சாதிக் திருவாரூர்
திருவாரூரில் SDPI நடத்திய மாபெரும் ரயில் மறியல் போராட்டம்..
Subscribe to:
Post Comments (Atom)
VAALTHEKAL
ReplyDelete