முத்துப்பேட்டை, பிப்ரவரி 16 : முத்துப்பேட்டை ஆசாத் நகரில் VSR நகைக்கடை என்ற பெயரில் திரு.யோகேஸ்வரன் என்பவர் சுமார் 15 வருடமாக கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையை வழக்கம்போல அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் இன்று 16 .02.2012 காலை 6 மணியளவில் கடைவளியாக டி சாப்பிடுவதற்கு வந்த யோகேஸ்வரன் அவரின் கடையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரின் கடை கதவு உடைக்கப்பட்டு கடையில் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது, உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டனர். அப்போது பொலிசார் கூறுகையில் இந்த செயலை தனி நபர்கள் யாரும் செய்ய வில்லை என்றும் கும்பல் கும்பலாக பல்வேறு திருட்டுகளை முத்துப்பேட்டை நகரில் செய்து வருகிறார்கள் என்றும் விரைவில் அவர்களை நாங்கள் பிடித்து விடுவோம் என்றும் அப்போது தெரிவித்தனர். மேலும் கூறுகையில் திருடர்கள் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி திருடி வருகிறார்கள் என்றும் தெரிவித்தனர். மேலும் இதில் சம்மத்தப்பட்டவர்கள் யார் என்பதை கண்டறிய கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஆகியவைகளை வரவழைக்க இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இக்கடையின் நிறுவனர் திரு.யோகேஸ்வரன் அவர்கள், முத்துப்பேட்டை நகரில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் திருடர்கள் இவற்றை பயன்படுத்தி கொள்ளை அடிக்க துணிகிறார்கள். இதனால் வர்த்தகர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சமாகவே இருந்து வருகிறது. எனவே இவற்றை உடனே தமிழக அரசு தடை இல்லாத மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தால் வர்த்தகம் செய்ய இலகுவாக இருக்கும்.
source from: www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், வழக்கறிஞர் தீன் முஹம்மது, K . எர்சாத் அஹமது
முத்துப்பேட்டை VSR நகைக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு கும்பல் கைவரிசை!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment