முத்துப்பேட்டை, ஏப்ரல் 23 : முத்துப்பேட்டையில் அன்பு என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவர் கும்பகோணம் பேங்க் அருகில் வசித்து வருகிறார். முத்துப்பேட்டை நகர் முழுவதும் மின்சாரம் அடிக்கடி துண்டிப்பது வழக்கம். அப்போது அவரது தாயார் வசந்தா வயது 55 என்பவர் சிம்ளி விளக்கை ஏற்றி வைத்துள்ளார். அப்போது வீட்டில் சமையல் செய்வதற்கு சிம்ளி விளக்கில் பேப்பர் மூலம் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராமல் சிலிண்டர் கசிவால் சிலிண்டர் வெடித்ததில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர் அனைவரையும் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவ அனுமதிக்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் வசந்தா வயது 55 என்வர் இறந்து விட்டார். மீதம் உள்ள 5 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் விபரம்: அன்பு என்பவற்றின் மனைவி பிரபாவதி வயது 35 , மகள் பிரதிகா வயது 17 , பக்கத்து வீடு ஆசிரியரான வசந்தா 35 , அவரது மகள் காவிய தர்சினி வயது 11 , மகள் காவிய அஞ்சலி வயது 5 , ஆவார்கள். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை.
முத்துப்பேட்டையில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் சாவு 5 பேர் படுகாயம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment