திருவனந்தபுரம்,ஏப்ரல் 30 :பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி தனது கண்களின் பார்வை சக்தியை இழந்துள்ளார். வலதுகண்ணில் முற்றிலும் பார்வை பறிபோய் உள்ளது. இடது கண் பாதி அளவில் பார்க்கும் சக்தியை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு அவசரமாக தொடர்ந்து 3 அறுவை சிகிட்சைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை 3-வது அறுவை சிகிட்சை நடத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் ராஜாஜி நகர் கண் மருத்துவமனையின் டாக்டர்களான கெ.பூஜங் ஷெட்டி, நரேஷ்குமார் யாதவ் ஆகியோர் தலைமையில் லேஸர் அறுவை சிகிட்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிட்சையின் பலனை அறிய காத்திருக்கவேண்டும். சர்க்கரை நோய் முற்றிப்போய் கண்ணை பாதிக்கும் டயபடிக் ரெட்டினோபதி மூலம் கண்களில் இரத்தம் கட்டிப்போய் மஃதனிக்கு பார்க்கும் சக்தி இழக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிட்சைக்கு முன்பு மஃதனியை சிறையில் சந்தித்த அவரது உடன் பிறந்தவர்களான முஹம்மது தாஹா, மலீஹா பீவி ஆகியோரை மஃதனியால் அடையாளம் காண முடியவில்லை. அவரது உடல்நிலை மோசமான பிறகும் கர்நாடாகா பாசிச பா.ஜ.க அரசும், சிறை அதிகாரிகளும் சிகிட்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததால் அவருக்கு பார்வை சக்தி இழக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்க்கரை நோய் படிப்படியாக அதிகரித்து கண்ணின் பார்வையை பாதிக்க துவங்கிய பொழுது மஃதனிக்கு உரிய சிகிட்சை அளிக்காததால் முற்றிய பிறகு அதிகாரிகள் கவனித்ததாக மஃதனியின் வழக்கறிஞர் சிராஜ் கூறுகிறார்.
ஜனவரி 13-ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்ய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கர்நாடகா அரசு, அப்துல் நாஸர் மஃதனிக்கு எந்த நோய்க்கும், சிகிட்சைகள் அனைத்தும் உரிய நேரத்தில் தேவைக்கு ஏற்ப அளிக்கப்படும் என உறுதி அளித்திருந்தது. உடல் நிலை சீர்கெட்ட அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் மனுவை நிராகரிக்க இந்த பிரமாணப்பத்திரம் காரணமானது.
தொடர்ந்து கேரள முதல்வர், எதிர்கட்சி தலைவர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மஃதனிக்கு சிகிட்சையை உறுதிச் செய்யக்கோரி கர்நாடகா முதல்வருக்கு கடிதம் எழுதினர். இதனைத் தொடர்ந்து அவர் பதில் கடிதத்தில் சிகிட்சை அளிப்பதாக உறுதி அளித்தார். ஆனால், உடல் ஆரோக்கியம் சீர்கெட்ட மஃதனிக்கு கண் பார்வை பறிபோனதை தொடர்ந்து சிறைவாழ்க்கை மிகவும் துயரமாக மாறியுள்ளது. வாசிப்பு, எழுத்து என சிறையில் தனது வாழ்க்கையை கழித்து வந்த அப்துல் நாஸர் மஃதனி பேசும் சக்தியையும் இழந்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அநீதமாக கர்நாடகா மாநில பாசிச பா.ஜ.க அரசு கேரள கம்யூனிச அரசின் துணையுடன் 2010 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனியை கைது செய்து கர்நாடகா சிறையில் அடைத்தது.
source from: www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EAK .முனவ்வர் கான்,
அப்துல் நாஸர் மஃதனி: இரு கண்களிலும் பார்வை பறிபோனது- அவசர அறுவை சிகிட்சை!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment