முத்துப்பேட்டை, மே 01 : முத்துப்பேட்டை அடுத்து சித்தமல்லி கடை தெருவில் ஒரு அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்து வருவதால், இதனால் அங்கு தேவையற்ற பிரச்சனைகள் அடிக்கடி நிகழ்த்து வருவதாகவும், இந்த பகுதியில் முழுக்க முழுக்க பெண்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியாக இருப்பதால் இந்த டாஸ்மாக்கை மாற்ற வேண்டும் என்று பல முறை மனுவாகவும், போராட்ட மூலமும் பொது மக்கள் தெரிவித்து வந்த நிலையில் நேற்று திடீர் என்று ஒன்றிய குழு உறுப்பினர் பார்வதி அண்ணாத்துறை தலைமையில் கடைத்தெருவில் திடீர் என்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலைமறியலில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டதால் சித்த மல்லி கடைத்தெருவில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டன. இதனால் மன்னார்குடி முத்துப்பேட்டை போக்குவரத்து சுமார் மூன்று மணிநேரம் தடைப்பட்டது. தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கோபி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் தேவதாஸ், தி.மு.க.ஒன்றிய பிரதிநிதி பாலஞான வேல், போராட்ட குழுவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவள்ளி இளங்கோ, சத்தியப்பிரிய கலாவதி, மற்றும் ரேவதி, ராஜேஸ்வரி, ஜோதி,பெரியநாயகி, மணிமேகலை ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதை ஒருவார காலத்திற்குள் சமந்தப்பட்ட தாஸ்மாக் கடை மாற்றப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உறுதி அளித்ததின் அடிப்படையில் பெண்கள் சாலைமரியலை விளக்கிக் கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெருக வாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் குணசீலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை அருகே டாஸ்மார்க் கடையை மாற்றக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்.!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment