முத்துப்பேட்டை,ஏப்ரல் 27 : முத்துப்பேட்டை வர்த்தகக் கழகத்தின் நிர்வாகிகளின் தேர்தல் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பரபரப்புடன் நடப்பது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த வருட தேர்தலுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலுக்கு அதிகாரியாக ஜனாப்.எம்.முஹம்மது அலியார் அவர்களை நியமனம் செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் இரா. இராஜாராமன், எம்.எஸ்.ராமலிங்கம், எஸ்.நெய்னா முஹம்மது, மு.முஹைதீன் பிச்சை, கெஜ்.எம்.ஹாஜா, கே.வி. கண்ணன், கே.மாரிமுத்து ஆகியோர் ஆணையரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பகல் 2 மணி அளவில் தேர்தல் ஆணையர் தலைமையில் முக்கிய நிர்வாகி முன்னணியில் மனுக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்று ஆணையர் முஹம்மது அலி தெரிவித்தார். இதில் தலைவராக இரா.இராஜாராம், துணைத் தலைவராக முஹைதீன் பிச்சை, கெச்.எம்.ஹாஜா, பொதுச் செயலாளராக எம்.எஸ். ராமலிங்கம், துணைச் செயலாளராக கே.வி.கண்ணன், கே.மாரிமுத்து, பொருளாளராக எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர். பின்னர் தேர்தல் ஆணையர் ஜனாப். முஹம்மது அலி சங்க ஆலோசகர்கள் இரா. திருஞானம், மெட்ரோ மாலிக் முன்னிலையில் சான்றிதழ் வழங்கினார். இந்த வர்த்தக கழகத் தேர்தல் முத்துபேட்டை நகர வியாபாரிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தெகுப்பு
ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்), AKL . அப்துல் ரஹ்மான்
முத்துப்பேட்டை வர்த்தகக் கழகத் தேர்தலில் அனைவரும் போட்டியின்றி தேர்வு.!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment