சென்னை,ஏப்ரல் 27 : கீழ்ப்பாக்கத்தில் பழமை வாய்ந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இதன் கீழ் பகுதியில் 10 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. முதல் மாடியில் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. முதல் மாடியிலுள ஒரு அறையில் தூத்துக்குடியை சேர்ந்த சத்யா, சுகந்தன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு அவர்கள் தங்கியிருந்த அறையில் நாட்டு வெடிகுண்டு திடீரென்று வெடித்துள்ளது. பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய வெடி குண்டால் சத்யா, சுகந்தன் ஆகியோரின் கைகள், விரல்கள் துண்டிக்கப்பட்டது. இந்த சத்தத்தை கேட்ட அருகிலிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த சத்யாவை சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், சுகந்தனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கவலைக்கிடமான நிலையில் இருக்கும் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சத்யா, சுகந்தன் இருவரும் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடிகள் என்றும், பல்வேறு கொலை வழக்குகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இவர்கள் எதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தார்கள் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ANSN .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா
சென்னையில் பயங்கர சப்தத்துடன் வெடித்த வெடி குண்டு...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment