சென்னை, ஏப்ரல் 29 : இலங்கை மகத்தாளை மாவட்டம் தம்புள்ள எனும் ஊரில் முஸ்லிம்கள் 60 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வந்த பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தினர் இடித்து சேதப்படுத்தி உள்ளனர். இந்த புத்த மதத்தினவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ராஜபக் ஷே அரசானது, அவர்களுக்கு ஆதரவு காட்டும் வகையில் பேசியது மட்டும் அல்லது அடுத்து ஹிந்து மத கோவிலையும் தாக்குவோம் என்று கொக்கரித்துள்ளது. இந்த செய்தியை கேட்ட உலக மக்கள் அனைவரும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று (28 .04 .2012) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராஜபக் ஷே அரசை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜனாப். முஹம்மது முனீர் சேட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாநில துணைப் பொது செயலாளர் ஜனாப். செய்து இக்பால், மாநில பொருளாளர் ஜனாப். தொண்டியப்பா என்கிற அபூபக்கர் சித்திக், மாநில செயலாளர் செங்கிஸ்கான், மற்றும் சமூக ஆர்வலர் திரு. T.S.S.மணி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். மேலும் மாநில செயலாளர் அபூ ஃபைசல், கலிபுல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஆர்பாட்ட முடிவில் போலிசார் அனைவரையும் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
source from: www.mttexpress.com,www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் அபு பைசல்.
சிங்கள அரசை கண்டித்து INTJ நடத்திய மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம்..
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment