முத்துபேட்டை, மே 19 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த SDPI -யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். அபூபக்கர் சித்திக் அவர்கள் பேட்டி பின்வருமாறு. முத்துப்பேட்டையில் கடந்த சில மாதங்களாக குடி தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றும், இந்த நிலையை பல முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு எடுத்து சொல்லியும் இவற்றை அலட்சியப் படுத்தி வருகிறது பேரூராட்சி நிர்வாகம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த நிலை மீண்டும் நீடித்தால் தமிழகத்தில் பரவி வரும் டிங்கு காய்ச்சல் நமது முத்துப்பேட்டை நகரங்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எனவே மக்களின் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து பேரூராட்சி நிர்வாகம் உடனே அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலைக்கு எந்த ஒரு தீர்வு எடுக்கா விட்டால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். மேலும் முத்துப்பேட்டை நகரங்களில் மிகவும் பற்றாக்குறையாக செயல் பட்டு வரும் இன்டேன் கேஸ் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விரைவில் நடத்த உள்ளதாகவும் அவர் இதன் மூலம் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் அஹ்மத் கான், அபு மர்வா.
முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இன்னும் மோசமாகத்தான் உள்ளது SDPI சித்திக் பேட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment