முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டை புதுத் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. மாணவர் சேர்க்கை பேரணியை உதவித்தொடக்கல்வி அலுவலர் ரகுராமன், இன்பவேணி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திரு. வ.க. ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுல்தான் இபுராஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணி புதுத் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ஆஸ்பத்திரி தெரு வழியாக பள்ளியை வந்தடைந்தது. சேர்க்கை பேரணியில் ஆசிரியர்களான இராமகிருஷ்ணன், ஆசிரியை முத்துலட்சுமி, அமிர்தம், துர்கா தேவி மற்றும் உறுபினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியர் ஆரோக்கிய அந்தோணி ராஜ் நன்றி கூறினார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
யூசுப் அலி ஆலிம், AKL .அப்துல் ரஹ்மான்
முத்துப்பேட்டையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பேரணி.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment