முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் உயர் மின் அழுத்த மின் கம்பம் பழுதடைந்து விழும் அபாயம்..



முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டையில் பட்டுக்கோட்டை சாலை பழைய வின்னர்ஸ் ஸ்கூல் வாசலில் உயர் மின் அழுத்த மின் கம்பம் உள்ளது. அதே இடத்தில் தற்போது தலைமை தபால் நிலையம் உள்ளது. அங்கு உயர் மின் கம்பம் அது இரும்பு போஸ்டில் உள்ளது. அதிலிருந்துதான் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. கீழ் தளத்தில் உள்ள மின்கம்பம் கீழே விழும் அபாயம் இருக்கின்றது. எந்நேரத்தில் கீழே விழும் என்ற அபாயம் அந்த பகுதி மக்களுக்கு அச்சமாகவே உள்ளது. மேலும் அந்த பகுதி எந்நேரமும் மக்கள் அலைமோதும் பகுதி முக்கியமான இடங்கள், கடைகள், முக்கிய பள்ளிவாசல்கள்,முக்கிய அலுவகம் பள்ளிக்கூடம் ஆகியவைகள் இரவு பகல் மக்களின் நடமாடும் பகுதிகளாகும். அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும் பகுதியாகும்.அந்த பகுதியில் இந்த மின்கம்பம் அறுந்து கீழே விந்தால் அதிக உயிர்சேதம் ஏற்படும்.இந்த நிலை குறித்து மக்கள் அதிகம் புலம்பி வருகின்றனர். இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு நிர்வாகி சுல்தான் இபுராஹீம் (சு.இனா) அவர்கள் கூறியதாவது. இந்த மின் கம்பத்தால் பலரது உயிர்கள் பலியாகும் நிலை உள்ளது என்றும் ஆனால் மின்சார வாரியம் இவற்றை சரி செய்யாமல் அலட்சியப்படுத்தி வருகிறது.அரசு இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த பிறகுதான் சரி செய்வார்கள். ஒரு மின்வாரிய ஊழியர் மரத்தில் ஏறினாலே கம்பம் முறிந்து கீழே விழுந்து விடும் தருவாயில் உள்ளது. இந்த நிலைக்கு மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா பொறுத்திருந்து பாப்போம்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKL .அப்துல் ரஹ்மான், U .பத்ரு ஜமான் (அரூஷி)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)