துபாய், ஜூன் 29: முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் ஹோர் அல் அன்ஸில் உள்ள முத்துப்பேட்டை நண்பர்கள் ரூமில் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று நடந்து முடிந்த ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது என்றும் இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களையும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி சார்பில் நினைவு கூறும் பொருட்டு தலைவர். ஜனாப். ஷேக் தாவூத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
மேலும் இதனைத்தொடர்ந்து வரக்கூடிய நோன்பை முன்னிட்டு ஃபித்ரா வழங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இந்த பித்ரா நிதியை வசூல் செய்ய ஜனாப். S. ஜஹபர் உசேன், ஜனாப். A. அஹமது அன்சாரி ஆகிய இருவர் தலைமையில் இரு குழுவாக பிரித்து வசூல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளார்கள். நிகழ்ச்சி முடிவின்போது சிறப்பு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.
தொகுப்பு:
A. முஹம்மது இல்யாஸ்
0 comments:
Post a Comment