தஞ்சாவூர், ஜூலை. 14: தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் லாட்ஜிகளில் தங்கி, லாட்ஜி உரிமையாளர் மற்றும் மேலாளர் அனுமதியுடன் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தஞ்சை மாவட்ட எஸ்.பி. தர்மராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. அர்ச்சுணன் மேற்பார்வையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் லாட்ஜிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 தனியார் லாட்ஜிகளில் உரிமையாளர் மற்றும் மேலாளர் அனுமதியுடன் இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுப்பட்ட 5 பெண்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் லாட்ஜ் உரிமையாளர்களின் அனுமதியுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து 2 தனியார் லாட்ஜிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பாலுச்சாமி, ராமலிங்கம், முரளிதரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
0 comments:
Post a Comment