முத்துப்பேட்டை, ஜூலை 11: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாட்டை சேர்ந்தவர் வெற்றி (32) இவர் திருவாரூர் மாவட்ட விடுதலைகச் சிறுத்தை கட்சியின் துணைச் செயலாளராக உள்ளார். கடந்த 5-ம் தேதி இரவு முத்துப்பேட்டையிலிருந்து வீட்டுக்கு திரும்பும்போது காரில் வந்த 7 பேரைக்கொண்ட மர்ம கும்பல் வெற்றியை சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த வெற்றி தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் எதிரொலியாக அன்றைய தினம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து போலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாத காவல் துறையை கண்டித்தும் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கோரியும் கம்மாளதெரு உட்பட 3 கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து,வீரப்பன், முருகானந்தம், சுந்தரி, வசந்தா, சரோஜா, முருகேஷ் உட்பட 30 குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்தினர்.
மேலும் சமையல் செய்தும் சாப்பிட்டனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய் துறையினரும், உயரதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தி ஈடுபட்டவர்களிடம் சுமூகம் ஏற்பட்டதால் போராட்டம் முடிவுற்றது.
0 comments:
Post a Comment