முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே நாளில் பா.ஜ.க. கட்சியின் மாநில செயலாளர் முத்துப்பேட்டையை சேர்ந்த முருகானந்தத்திற்கு பிறந்த நாள் என்றும், இவரது பிறந்த நாள் விழாவை சந்தை அருகே உள்ள SVK அன்பு திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்) இந்த பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. வின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்ததாகவும், மேலும் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேட்டையிலிருந்து குட்டியார் பள்ளி வழியாகவும், தம்பிக்கோட்டையிலிருந்து புதுத்தெரு பள்ளிவாசல் வழியாகவும் பெருநாள் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், மேலும் ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகேயும் பட்டாசுகளை வெடித்து வன்முறையை தூண்டும் கோசங்களை எழுப்பியதாகவும், இதை பார்த்த சில இஸ்லாமிய நண்பர்கள் இவற்றை தட்டிக்கேட்ட தாகவும் கூறப்படுகிறது.
"இந்நிலையில் அனுமதி இன்றி பேரணியாக வந்ததற்காகவும், வன்முறையை தூண்டும் வகையில் கோசங்களை எழுப்பியதற்காகவும், மக்கள் நடமாடும் பகுதிகளில் பட்டாசு மற்றும் சக்தி வாய்ந்த வெடிகளை வெடித்து பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்திய தற்காகவும், பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சரியாக மதியம் 3 மணியளவில் பாப்புலர் பிரண்ட் முத்துப்பேட்டை நகரத் தலைவர் அப்துல் மாலிக், SDPI கட்சியை சார்ந்த சர்தார், மற்றும் சேக் மைதீன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு புகார் மனு அளிக்க சென்றதாக கூறப்படுகிறது. மேலும் புகார் மனு அளிக்கச்சென்ற மூவரையும் காவல்நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று இரவு இஸ்லாமிய நண்பர்கள் 2 சக்கர வாகனத்தில் 3 பேர் வந்ததற்கு போலிசார் அவர்களை மடக்கி பிடித்து அபராதமும் விதித்துள்ளனர். ஆனால் இன்று பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களில் மூன்று மூன்று பேராக வருவதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிரச்சனையை கேள்விப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்றதாகவும், அப்போது அனைத்து இளைஞர்கள் மீது போலிசார் லத்தி சார்ஜ் பண்ணியதாகவும், இதனால் இளைஞர்கள் மீது காலில் பலமாக உள் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் ஆசாத் நகர் நாகூர் கனி என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. (முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்)மேலும் காயல் பட்டினத்தை சேர்ந்த ஓர் இஸ்லாமியரை முத்துப்பேட்டை சந்தை அருகே வைத்து பா.ஜ.க. வினர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடையாளம் தெரியாத சில பேர் நான்கு கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி வர்த்தகம் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக் தலமையில் பெரியக்கடைத் தெருவில் கூடினர். சிறை வைக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்யக்கோரி சரியாக 4 மணியளவில் SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக் தலமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சரிபா வாய்ஸ் முக்கத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முத்துப்பேட்டை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியல் செய்த சற்று நேரத்தில் முத்துப்பேட்டையின் DSP தலமையில் காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு SDPI சித்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அரைமணி நேரத்திக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் சித்திக்கின் உத்தரவால் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆயினும் இளைஞர்கள் கலைந்து செல்லாமல் பெரிய கடைத்தெருவில் அதிக எண்ணிக்கையில் குழுமி இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த SDPI கட்சியின் தேசிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக், முத்துப்பேட்டையில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க. வினர் நடந்து கொள்கின்றனர் என்றும், இப்போது நடத்தப்பட்ட இந்த பிறந்த நாள் விழா கொண்டாடும் சாக்கில் கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.க. வினர் சதி செய்வதாகவும் கூறினார். மேலும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு விளக்கம் கேட்பதற்காகத்தான் காவல் நிலையம் சென்றிருந்ததாகவும் அப்போது அங்கிருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உன்னை போட்டு தள்ளிவிடுவேன் என்று என்னை மிரட்டியதாகவும் செய்தியாளருக்கு பேட்டியளித்தார் சித்திக்.
பின்னர் சரியாக 6 மணியளவில் 10 பேர் கொண்ட குழு காவல் நிலையம் சென்றது. அப்போது மூவரும் விடுவிக்கப்பட்டு சரியாக 7:30 மணிக்கு பெரிய கடைத்தெருவிற்கு வந்தடைந்தனர். அப்போது அங்கே குழுமி இருந்தவர்கள் நாரே தக்பீர்.! அல்லாஹ் அக்பர்.! என்று கோசங்களை எழுப்பினர்.
பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய சித்திக், இது நமது ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும், இது போன்று ஒற்றுமையாக செயல்பட்டால் தீய சக்திகளிடமிருந்து முத்துப்பேட்டை மக்களை பாதுகாக்கலாம் என்றும் கூறினார். சரியாக 20 நிமிடங்கள் சிற்றுரை யாற்றினார் சித்திக். பின்னர் அனைவரையும் அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.
இந்நிலையில் அப்துல் மாலிக், சர்தார், சேக் மைதீன் ஆகிய மூவர் மீதும் காவல்துறை வழக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சித்திக் மீது 4 வழக்குகளும், பா.ஜ.க மாநில செயலாளர் முருகானந்தம் மீது 1 வழக்கும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதியின்றி வாகனப்பேரணி நடத்தியதற்காக SDPI கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீதும், பா.ஜ.கவை சேர்ந்த 60-க்கு மேற்பட்டோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தர்ஹா பாக்கர் அலி தலைமையில் மனித உரிமைகள் அமைப்பின் மாநில தலைவர் G .பஷீர் அஹமது ,மமக மாவட்ட செயலாளர் மாலிக் உள்ளிட்டோர் மாவட்ட SP யை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது .
மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே அனைத்து தொலைக்காட்சிகளிலும் முத்துப்பேட்டையில் பதற்றம் என பரபரப்பு செய்தியாய் வெளியிட்டது. தொலைகாட்சி செய்தியின் வாயிலாக சம்பவத்தை கேள்விப்பட்ட சமூக ஆர்வலரும், மனித நேயருமான பேராசிரியர். ஆ. மார்க்ஸ் அவர்கள், முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சம்பவங்களை கேட்டறிந்தார். எனவே யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது பாராபட்சமின்றி தக்க நடவடிக்கை எடுத்து முத்துப்பேட்டையில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் கட்டிக்காக்க வேண்டுமென முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் கேட்டுக்கொள்கிறது.
களத்தொகுப்பு: ஜே.ஷேக்பரீத்
M.A.journalism & mass communication
Member TamilNadu Press Club
Chennai.

கலவரத்தில் காரணமானவர்களுக்கு சுதந்திரமான வாழ்க்கை.. அனால் அப்பாவி மக்கள் மீது ஏராளமான பொய்வழக்கு...
ReplyDeleteகட்டாயமாக காவல்துறையினர் சம நிலையோடு நடக்க வேண்டும் அப்போதுதான் முத்துப்பேட்டையில் மத நல்லிணக்கம் பேணி காக்க முடியும்
ReplyDeleteஅனைத்து மக்கள் மீதும் சமநிலையை பேன வேண்டும் காவல் துறை
ReplyDeleteமுத்துப்பேட்டையில் முஸ்லிம் இளைஞர்களையே குறிவைக்கும் காவல்துறை...
ReplyDelete
ReplyDeleteமுத்துப்பேட்டையில் இயங்கி வரும் RSS, BJP போன்ற தீவிரவாத அமைப்பை உடனே தடை செய்யவேண்டும்........
ReplyDeleteமுத்துப்பேட்டையில் மத நல்லிணக்கம் பேன வேண்டுமா ஃபாசிஸ சதிகார கும்பலை தடை செய்தால் மட்டுமே முடியும்................
SDPI Katchi moolam RSS, BJP pondra naaigalai India naattai vittu viratti adippom.. insha allah......
ReplyDelete