முத்துப்பேட்டை, செப்டம்பர் 12: முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தை சேர்ந்த அய்யா கணபதி. இவரது மகன் முருகேஷ் குமார் (14). இவர் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் முகேஷ்குமார் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். மாலை நேரத்தில் செம்படவான்காடு பாமணியாற்றில் நண்பர்களுடன் குளித்த போது ஆற்றின் நீரால் முகேஷ்குமார் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது முகேஷ்குமார் நீரில் மூழ்கி பலியானார்.
பின்னர் முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் பலமணிநேரம் போராடி முகேஷ்குமாரின் உடலை மீட்டனர். பின்னர் முகேச்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மாணவன் முகேஷ்குமார் பலியான சம்பவத்தால் நேற்று அவர் படித்த தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி ஒரு நாள் விடுமுறையளித்துள்ளது.
தொகுப்பு: A.K.L.T. அப்துல் ரஹ்மான். BBA.
0 comments:
Post a Comment