முத்துப்பேட்டை, செப்டம்பர் 10: முத்துப்பேட்டையில் உள்ள மாங்குரோவ் சதுப்புநிலக்காடு உலக வரலாற்றில் எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. இதன் அளவு 11,885 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. முத்துப்பேட்டை கழிமுகத்தில் மாங்குரோவ் காடுகள், சிற்றோடைகள், கடற்கரைக் காயல், மணல் மேடுகள் அமைந்துள்ளன. குளிர்காலத்தில் இப்பகுதியில் வாழ்வதற்கென நூற்றுக் கணக்கான விதவிதமான வெளிநாட்டு நீர்ப்பறவைகள் வருகின்றன. அவற்றில் கிரே பெலிக்கன் பழுப்பு கூழைக்கடா), கிரேட்டர் பிளம்மிங்கோ (பூநாரை), டார்டர் (பாம்புத் தாரா), பிண்டெயில் டக் (ஊசி வால் வாத்து), பெயின்டட் ஸ்டாக் (செங்கால் நாரை) ஆகியவைகள் முத்துப்பேட்டையில் காணப்படும் பறவை இனங்களாகும். குள்ளநரி, பழந்தின்னி வெளவால் ஆகிய பாலூட்டி பறவைகளும் வாழ்கின்றன.
மேலும் முத்துப்பேட்டை கழிமுகத்தில் உள்ள முள்ளிப்பாலம் காயல் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை காயல் ஆகும். இது 11 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது. காவேரி ஆற்றின் கிளை நதிகளான நசுவினியாறு, பட்டுவாஞ்சியாறு, பாமினியாறு, கோரையாறு, கிளைத்தாங்கியாறு, மரக்காக்கோரையாறு ஆகிய ஆறுகள் இங்குள்ள மாங்குரோவ் காடுகளுக்கு நீர்வளம் தருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்குவதற்காக 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஒதுக்கீட்டின் மூலம் கண்ணாடி இலைப் படகுகள் வாங்குதல், மர வீடுகள் அமைத்தல், வரவேற்பு மையம் கட்டுதல், காட்சி கோபுரம் அமைத்தல், அனுகுசாலை அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய மேற் கொள்ளப்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் முத்துப்பேட்டையில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தொகுப்பு: ஜே: சேக் பரீத்
ஏற்கனவே சேது சமுத்திர திட்டம் அறிவித்து 5கோடி செலவு செய்து துறைமுகம் கட்டி விட்டார்கள். அடுத்து தாலுக்கா என அறிவித்து தாலுக்கா அலுவலகம் கட்டி விட்டார்கள். கல்லூரிகள் அமைக்க போவதாக கூறி அதுவும் கட்டிவிட்டார்கள். இது ஒன்றுதான் பாக்கி இருந்தது இதையும் செய்து முடித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கப் போகிறார்கள்.எத்தனயோ அறிவிப்பை பார்த்து ஏமாந்த முத்துப்பேட்டை மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒன்றும் புதுசு அல்ல.
ReplyDeleteanbutan abdul hameed
ஏற்கனவே சேது சமுத்திர திட்டம் அறிவித்து 5கோடி செலவு செய்து துறைமுகம் கட்டி விட்டார்கள். அடுத்து தாலுக்கா என அறிவித்து தாலுக்கா அலுவலகம் கட்டி விட்டார்கள். கல்லூரிகள் அமைக்க போவதாக கூறி அதுவும் கட்டிவிட்டார்கள். இது ஒன்றுதான் பாக்கி இருந்தது இதையும் செய்து முடித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கப் போகிறார்கள்.எத்தனயோ அறிவிப்பை பார்த்து ஏமாந்த முத்துப்பேட்டை மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒன்றும் புதுசு அல்ல.
ReplyDeleteMuthupettai nagar ithan moolam periya nilaikku thirumbum endru naangal aavaludan irukirom.
ReplyDeleteBY..
Shajahan (Adirai)
Very thanks for Tamil Nadu C.M
ReplyDeleteMuthupettai muslimgalin paguthi I than moolam valarchi adaivathai Amiga santhosam
ReplyDelete