தமிழகம், செப்டம்பர் 10: பிள்ளையார் வழிபாட்டை, வாதாபியிலிருந்து இறக்குமதி செய்து தமிழர்கள் மத்தியில் புகுத்தியது (கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) பரஞ்சோதி என்ற பார்ப்பன தளகர்த்தன் ஆவார். (பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் பிறந்தது எப்படியோ? என்ற பல்கலைக் கழகப் பாட நூலில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது).
இங்கே பரவிய - பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக பிள்ளையார் வழிபாடு, விநாயகர் சதுர்த்தி - ஏதோ ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் முதல் 5 ரூபாய் பிள்ளையார்வரை களி மண்ணால் செய்யப்படுவதை வாங்கி வீட்டில் வழிபட்டு, ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ போடுவது வழமை.
அண்மைக்காலங்களில் - வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகள் தாங்கள் பெறும் பெரும் பணத் திற்காக, வட முதலாளிகள் உதவியால் தமிழ்நாட்டில், மும்பை யைப் போலவே, 10 அடி, 15 அடி ராட்சசப் பிள்ளையார் என்று வேடிக்கை - விநோத உருவங்களைச் செய்து, ரசாயனக் கலவை கள் - வண்ணங்களைப் பூசி, அப்பாவி ஏழை எளிய அடித்தட்டு வறுமையாளர்களான மக்களுக்கு கைநிறையப் பணம் கொடுத்து, அவர்களும் பக்தி - போதை - இரண்டுக்கும் ஆளாகி, பெரும் பிரச்சினைகளை உருவாக்கி, கடலில் - ஆற்றில் கரைக்கும் வகையில், இந்து மதப் பண்டிகைகளால் தங்கள் கட்சிகளை வளர்த்து, மதவெறியைக் கிளப்பிடும் அருமையான, எளிமையான வழியாக ஆக்கி குளிர்காய்கின்றனர்!
வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் பள்ளி வாசல் வழியே செல்வது, சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பது போன்ற அடா வடித்தனத்தில் ஈடுபட்டு, அரசுகளுக்கு மிகப்பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்திடுவதை ஆண்டு தவறாத வாடிக்கையாக்கி வேடிக்கை காட்டுகின்றனர்
வாக்கு வங்கிகளுக்கு அஞ்சி - பல அரசுகள் இது ஏற்படுத் தும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையையோ, மாசு கட்டுப்பாட்டினைப் பற்றியோ கவலைப்படாது, சுற்றுச் சூழலைக் கெடுக்க பிள்ளை யாரைக் கரைக்கும் விசர்ஜன வேடிக்கைக் கூத்தினைத் தடுக்காமல், மயிலே, மயிலே இறகு போடு! என்கின்றனர்!
உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் பல தெளிவாகவே, கடலில் - ஆற்றில் இரசாயனக் கலவைப் பிள்ளையார்களைக் கரைத்து மாசுபடுத்தக் கூடாது என்று தீர்ப்புகள் - சட்டப்படி தடுக்க வாய்ப் பினை அள்ளித்தரும் வகையில் இருந்தும் கைபிசைந்து வேடிக்கை பார்க்கின்ற பரிதாப நிலையே நீடிக்கிறது!
மாசு கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி - வேண்டுகோள்தான் விடுக்கிறார். அவர் சட்டப்படி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாமே!
முன்பு தமிழ்நாட்டில் இருந்ததுபோல, சிறுசிறு பிள்ளையார் பொம்மைகளை வாங்கி வைத்து உங்கள் பிள்ளை விளையாட்டை, பக்தித் திருவிழாவான சதுர்த்தியைக் கொண்டாடலாமே தவிர, பொதுமக்களுக்கு இடையூறு, பொதுச்சொத்து நாசம், பொது அமைதிக்குக் கேடு - மத நல்லிணக்கத்திற்கு மாசு - இவைகள் கூடாது என அரசு கூறி அதைத் தடுக்க முன்வரவேண்டும்.
நீதிமன்றங்கள் ஆணையிட முடியும். அதனைச் செயல்படுத் தித் தடுப்பது அரசு அதிகாரிகள் - காவல்துறை அதிகாரிகள் - மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கையில்தான் உள்ளது. எனவே, பெரிய பெரிய கிரேன்கள், பல்லாயிரக்கணக்கில் காவல்துறைக் குவிப்பு இதனை மிச்சப்படுத்தலாமே!
எனவே, வருமுன்னர்க் காப்பது இத்துறையிலும் அவசியம்.
மத உணர்வு புண்படுகிறது என்பதைவிட, மதவெறியை மக்களிடையே பரப்புவது எவ்வளவு ஆபத்து என்பதை உணர வேண்டாமா? நடவடிக்கை தேவை! தேவை!!
0 comments:
Post a Comment