முத்துப்பேட்டை, செப்டம்பர் 02: முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு, பத்தாங்காடு சாலையில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி திலகவதி, இவரது மூத்தமகள் நிவேதிதா (21). அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் 2010-ம் ஆண்டு டிப்ளோமோ படித்து வந்தார். தற்பொழுது கல்வி இறுதியாண்டு அவர் படித்து வந்த நிலையில் கல்லூரி விடுதியில் படித்து வந்த அவருக்கு ஓராண்டு முன் கடும் வையிற்றுவலி ஏற்பட்டது. இதனால் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் கல்லூரிக்கு சென்ற நிவேதிதாவுக்கு வயிற்றுவலி அதிகமானது. இதையடுத்து ஊர் திரும்பிய அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் சளித்தொல்லை, அல்சர் பின்னர் புற்றுநோய், மஞ்சள் காமாலை, தொண்டையில் நோய் என்று ஆளாளுக்கு ஒரு வியாதியை கூறி வந்தனர்.
இப்படி பல மருத்துவரிடம் காட்டியும் பயனில்லாமல் எந்த நோயால் நிவேதிதா பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியாத நிலையில் தற்பொழுது நிவேதிதா 50 கிலோ எடையுடன் இருந்த அவர் இன்று 25 கிலோவாக மாறி உடல் மெலிந்து உயிருக்கு போராடி வருகிறார். அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. சிகிச்சைக்காக அவரது பெற்றோர் வட்டிக்கு 2 இலட்சம் வரை கடன் வாங்கி கடனாளியாக தவிக்கிறது. அவரது குடும்பம்.
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை பெற அடையாள அட்டை இல்லாததால் விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு முன்புதான் அடையாள அட்டை பெற்ற நிலையில் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது என்று விபரம் தெரியாமல் பெற்றோர் தவித்து வருவதாகவும் அவர்களுக்கு சிறு செலவு செய்வதற்கு கூட பொருளாதார வசதி இல்லாமல் தவித்து வருவதாக நேற்று தனியார் நாளிதழ் ஒன்றில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியை கண்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உதவி செய்ய முன்வந்து குவியத்துவங்கினர்.
நிவேதிதாவுக்கு ரோட்டரி சங்கம், வர்த்தக கழகம் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் நிதி உதவி அளித்தனர். தாசில்தார் ராஜகோபால் மாணவியை நேரில் கண்டு பல்வேறு உதவிகள் அளிப்பதாக உறுதி கூறினார். இந்த நிலையில் உயிருக்கு போராடி வரும் மாணவி நிவேதிதாவின் பரிதாப நிலையை அறிந்த தமிழ்நாடு அரசு சுகாதரா துறை சேவை செய்ய முடிவு செய்தது. அதன் படி தமிழக அரசு சுகாதார துறை செயலாளர் ராதாகிருஸ்ணன் நிவேதிதா பெற்றோரிடம் பேசி சென்னைக்கு அழைத்துவர உத்தரவிட்டார்.
இதனை அறிந்த தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சென்னைக்கு அழைத்துச் சென்று சேர்க்கும்வரை அனைத்து செலவினத்தையும் ஏற்றது. மேலும் அனைத்து கட்சியை சார்ந்தவர்களுக்கும் மாணவி நிவேதிதாவுக்கு பொருளாதார் உதவிகளை வாரி வழங்கினர். சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நமது நிருபர்:
முஹைதீன் பிச்சை
0 comments:
Post a Comment