சென்னை, அக்டோபர் 18: நரேந்திர மோடி இன்று சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் எதிரில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. இதில், மாதர்சங்கத்தை சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.
ஒரு மாணவரின் சட்டையை கிழித்து லத்தியால் தாக்கினர் போலீசார். இதனால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு துணை கமிஷனர் கிரி மாணவர்களை சமாதானம் செய்து அனைவரையும் கைது செய்தனர். இதனால் அண்ணாசாலை பரபரப்புடன் காணப்பட்டது.

புரட்சிகர் மாணவர் - இளைஞர் முன்னணி யினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செண்ட்ரலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது டாடா, அம்பானிகளின் எடுபிடி, இந்துமதவெறி பாசிஸ்ட் மோடியே தமிழகத்தில் நுழையாதே என்று கோஷம் எழுப்பினர்.
0 comments:
Post a Comment