திருவாரூர், அக்டோபர் 17: திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூர் மரக்கடையில் வசித்து வந்தவர் தனசேகரன் (45). இவர் கூத்தா நல்லூர் அருகே உள்ள நாகராஜன் கோட்டகம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சுமதி (42). இவர் பழையனூரில உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தனசேகரன் கடந்த மே மாதம் 15–ந் தேதி மர்மமான
முறையில் இறந்து கிடந்தார்
.
அவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனசேகரன் மனைவி சுமதி திருவாரூர் டி.எஸ்.பி. வைத்தியலிங்கத்திடம் சரண் அடைந்தார். அப்போது அவர் தனது கணவரை கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
தனக்கும் தான் பணிபுரியும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதற்கு கணவர் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக போலீசில் கூறினார்.
சரண் அடைந்த சுமதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கணவரை கொன்றதாக 5 மாதங்களுக்கு பின் மனைவி போலீசில் சரண் அடைந்துள்ள சம்பவம் கூத்தா நல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment