கோவை , அக்டோபர் 17: கோவை வடவள்ளியில் வெடிகுண்டு நாடகமாடிய பிஜேபி செயலாளர் ராமனாதனையும் ஏனைய சங்கபரிவாரர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி,ஐ கட்சியின் சார்பில் சீர்குலைக்கும் விதமாக வருகின்ற பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி பிஜேபி யும் சங்பரிவார கும்பலும் திட்டமிட்டு சமுகத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பகண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொது அமைதிக்கு எதிராக, மத நல்லிணக்கத்தை து வேதனையே. அவர்களாகவே திட்டமிட்டு நிகழ்வுகளை எர்ப்படுத்தவும், அதை வைத்து பந்த் நடத்துவதும், அரசு பேருந்துகளை அடித்து நொறுக்குவதும், வணிக நிறுவனங்களை அடைக்கச் செய்வதும், எதிர்ப்பவர்களின் நிறுவனங்களை தீயிட்டு கொளுத்துவதும் சமீபகாலமாக தொடர் கதையாகிவிட்டது.
அண்மையில் அவர்கள் நடத்திய பந்த் ஒன்றில் கணபதியில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில் பெட்ரோல் குண்டுகளை பட்டப்பகலில் வீசியது பொது மனித சமுகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அனுமன் சேனாவை சேர்ந்த சக்திவேல் தன்னை தீவிரவாதிகள் கடத்தி விட்டார்கள் என்று போலியாக நாடக மாடி பொது சமுகத்தின் அமைதியை சீர்குலைத்து மத மோதல்களை ஏற்ப்படுத்த முயற்சி செய்தது , அதன் தொடர்ச்சியாக செல்வபுரம் பகுதியில் ஒரு வியாபாரியின் வீட்டில் விஷ்வ ஹிந்து பரிசத்தை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டை வீசியதும், வட வள்ளியைச் சார்ந்த ராமநாதன்(மண்டல பாரதிய ஜனதா செயலாளர்)தன்னுடைய வீட்டில் தானாகவே பெட்ரோல் குண்டை வீசி விட்டு மதகலவரத்தை ஏற்ப்படுத்த முயற்சித்ததும், தொடந்து சங்பரிவார கும்பலின் வாடிக்கையாகிவிட்டது. இவர்களின் ஒவ்வொரு விசயத்திலும் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகள் பிஜேபி யும் சங்கப்பரிவார கும்பலை சார்ந்தவர்கள் என்றும் பொது சமுகத்திற்கு அடையாளம் காட்டியது .
எனவே தமிழக அரசு இந்த சுயநலவாதிகளையும், மாதவாத கும்பலையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் , கடுமையான(குண்டர்)சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிணத்துக்கடவு தொகுதி செயலாளர் குமாரசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலவைர் சிவகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார். கிணத்துக்கடவு தொகுதி துணைத் தலைவர் தளபதி கிருஷ்ணன் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர், எஸ்.டி.டி.யூ மாவட்ட தலைவர் அன்சர் செரிப், மாவட்ட செயலாளர் கிஸ்மி அலி மற்றும் தொகுதி, கிளை நிர்வாகிகளும் ,செயல் வீரர்களும், திரளாக பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தகவல் :ஜே :ஷேக்பரீத்
0 comments:
Post a Comment