முத்துப்பேட்டை, அக்டோபர் 22: முத்துப்பேட்டை தர்காவுக்கு எதிர்புறம் இருக்கும் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள குளத்தின் மேல் கரையில் பட்டாமணியார் ஜீவானந்தத்திற்கு சொந்தமான இடத்தில் நேற்று (20.10.13) பகல் 3 மணியளவில் பூமி அதிர்ந்து சூலம் வெளிப்பட்டதாக பாண்டியன் என்கிற சேகர் (மனநலம் பாதிக்கப்பட்டவர்) பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த சம்பவத்தை அறிந்த பாரதிய ஜனதாவினர் அந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி சிலைகள் இருந்தால் அந்த இடத்தில் நாங்கள் கோவில் கட்டுவோம் என்ற கலவரத்திற்கான விதையை விதைக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இருதரப்பும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையும், வருவாய்துறையும், இரண்டு நாள் கழித்து தோண்டலாம் என்று அறிவுத்தியதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சூலத்தை வருவாய்துறையினர் வசம் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தர்கா பகுதி முஸ்லிம்கள் கூறுகையில்: இது ப.ஜா.க.வினரின் திட்டமிட்ட சதியே தவிர வேறொன்றும் இல்லை, அவர்கள் முன்பே திட்டமிட்டு பூமிக்குள் சிலையை புதைத்துவிட்டு தற்பொழுது பிரச்சனையை கிளப்புகிறார்கள். மேலும் பாண்டியன் என்கிற சேகர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் உடனே தமிழக அரசு தலையிட்டு ஆரம்பத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
அமைதியா இருந்த ஊரில் முதன் முதலில் விநாயக ஊர்வலம் என்ற பெயரில் முத்துப்பேட்டையை கலவர பூமியாக மாற்றிய சங்பரிவார சக்திகள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் பெரியதாக கலவரம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர் ஆகையால் தற்பொழுது அமைதியை சீர்குலைக்க புதியதாக ஒரு வழியை தேடுகின்றனர் அதனுடைய வெளிப்பாடே இந்த சூலாயுத நாடகம்.
0 comments:
Post a Comment