முத்துப்பேட்டை, அக்டோபர் 28: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் நேற்று தினமலர் நாலாம் பக்கத்தில் கருணாநிதியின் தவரான கார்டுன் வெளியிட்டதை கண்டித்து தி.மு.க.வினர் நூறு பேர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் தலைமையில் தினமலர் நாளிதழை தீயிட்டு கொழுத்தினார்கள்.
மேலும் தின மலரை கண்டித்தும் சம்மந்தபட்டவர்களை கைது செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் அவ்வழியாக சென்ற பேருந்துகளை மறைத்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதில் நகர அவைத்தலைவர் ராமஜெயம், நகர துணைச் செயலாளர் நவாஸ்கான், பொருளாளர் பாலு, மாவட்ட பிரதிநிதிகள் தமீம், இபுராஹீம் மாவட்;ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய இளைஞர் அணி ஜாம்பை கல்யாணம், பேருராட்சி சவுன்சிலர்கள் ஐய்யப்பன், கிருஷ்ணன், ஜெகபருல்லா, ரெத்தினகுமார், நகர நிர்வாகிகள் செல்வம் அமனுல்லா, பியூட்டி நவாஸ், ஆறுமுகம், ரபிஅகம்மது, சிவ சுப்பிரமணியன், அன்பன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதனால் அரை மணிநேரம் போக்கு வரத்து தடைப்பட்டது இந்த நிலையில் சுமார் 2 மணி நேரம் கழித்து எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீஸார் கடைத் தெருவில் ஒரு கடையில் அமர்ந்து இருந்த மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக்கை சுற்றி வழைத்து கைது செய்து ஜீப்பில் ஏற்றினார்.
அவருடன் நகர நிர்வாகி செல்வமும் கைது செய்யப்பட்டனர். இச்செய்தியை கேள்விப்பட்ட தி.மு.க.வினர் பலரும் முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எடையூரில் 20 தி.மு.க.வினர் கைது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் முத்துப்பேட்டை ஒன்றிய தி.மு.க செயலாளர் ந.உ.சிவசாமி தலைமையில் தினமலர் நாழிதழ் தீயிட்டு எரிக்கபட்டன. ந.உ.சிவசாமி உட்பட 20 தி.மு.க.வினரை எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் கைது செய்தார்.
Source from: www.muthupettaiexpress.com
ஒவ்வொரு தனிமனித சுதந்திரத்தை கெடுத்து சின்னபின்னமாக்க நினைக்கும் இது போன்ற தின (மலம்) நாளிதழை தடை செய்ய வேண்டும்....
ReplyDeleteஇந்து முஸ்லிம் சமுதாய மக்களிடம் கலவரத்தை தூண்டும் விதமாக பல்வேறு நிலைபாடுகளில் ஈடுபட்டு வருகிறது இந்த தின மலம்
ReplyDelete