சென்னை, அக்டோபர் 28: சென்னை பாரிமுனையில் பெரிய களவரமே நடந்து விட்டது. பீகாரில் குண்டு வெடித்த உடன் பாரிமுனையில் இருக்கும் ரேவ் (சேரி) காரங்க இந்துத்துவாவாதிங்க கூட சேர்ந்துக்கிட்டு பாரிமுனை பகுதியில் போவோர் வருவோரிடம் ‘பாரத் மாதாகி ஜே’ன்னு சொல்லு இல்ல அடிப்பேன்னு அனைவரையும் வற்புறுத்தியிருக்காங்க. ஐஎன்டிஜே வட சென்னை கிளை சகோதரர்கள் அந்தப் பகுதியில் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் வந்த இந்துத்துவாவாதிகள் நீங்களும் பாரத் மாதாகி ஜேன்னு சொல்லுங்கன்னு வற்புறுத்திஉள்ளார்கள் இந்திய தவ்ஹித் ஜமாத்சகோதரர்கள் நாங்க சொல்ல மாட்டோம்னு சொன்னதும் அவர்களைப் போட்டு அடித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பிரச்சினை வெடித்துள்ளது.
இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் அந்தப் பகுதி காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அடித்தவர்களை நாங்கள் நாளை காலை 11 மணிக்குள் பிடித்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்குள் இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியதும் எஸ்.டி.பி.ஐ., தமுமுக, இந்திய தவ்ஹித் ஜமாத் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஸ்பாட்டிற்கு வந்து காவல்துறையினரிடம் தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியிருக்காங்க. இரவு 11 மணிவரை பாரிமுனை பகுதியில் 1000க்கும் மேற்பட்டோர் குவிந்து விட்டனர். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்தி. சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முஸ்லிம் சகோதரர்கள் கலைந்து சென்றுள்ளனர். இன்று அவர்களை கைது செய்யா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்க பட்டுள்ளது
Moosa Raju ஒரு விளக்கம்...
ReplyDeleteநேற்று 27-10-2013 இரவு 7.30 மணியளவில் சென்னை பிராட்வே மினர்வா தியேட்டர் அருகில் சுமார் 15 பேர் கொண்ட இந்துத்துவா குண்டர்கள் “பாரத் மாதாகி ஜே” என்று சொல்லுங்கள் என்று அந்த வழியாக போவோர் வருவோரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த முஸ்லிம் இளைஞர்களிடமும் இதுபோல் கூறச் சொல்லி அடித்துள்ளனர். இதைக் கேள்விப்பட்டதும் மாஸ்கான்சாவடி முஸ்லிம்கள் அங்கே விரைந்துள்ளனர். பிறகு ஏற்பட்ட சம்பத்தைத்தான் நான் முதலில் சொல்லியிருந்தேன்.
இந்த சம்பவத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தவறான சில தகவல்களையும் அளித்து விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். சரியான தகவல்களை இந்த வார மக்கள் ரிப்போர்ட் இதழில் காணுங்கள்.
- மூஸா ராஜூ