- முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க மற்றும் இந்து முண்ணனியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுகவினர் மாவட்ட கண்காணிப்பாளரை (SP) நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது ! !திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் கடந்த 17 ம் தேதி நடைபெற்றது .இதில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமகாவும் கோஷங்கள் எழுப்பபட்டன. அதோடு காவல்துறை விதித்த நேரமும், நீதிமன்ற ஆணையையும் அவமதித்தும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் தாமதாமகவே ஊர்வலம் வரபட்டது. அதோடு இத்ரீஸ் என்பவர் வீட்டின் மீதும் கலவர நோக்கில் கற்களை எறிந்து சென்றுள்ளனர். இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமுமுக சார்பில் 25-09-2013 அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.இந்சந்திப்பில் நூர்தீன் மாவட்ட தலைவர் தமுமுக , முகம்மது மாலிக் மாவட்ட செயலாளர் மமக , நெய்னா முகம்மது நகர தலைவர் தமுமுக, வக்கீல் தீன் முகம்மது நகர செயலாளர் மமக, முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக, முகம்மது தாவுது முன்னால் நகர தலைவர் தமுமுக மற்றும் சமூக ஆர்வலர் சேட்டு நஜீம், பாட்ஷா உடன் இருந்தார்கள்...Thanks ForMuhaitheen
0 comments:
Post a Comment