முத்துப்பேட்டை. நவ.1 முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதிகாரிகள். மற்றும் பேருராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கும் போது 1வது வார்டு பாஜக கவுன்சிலர் மாரிமுத்து என்பவர் கொசுவலை ஒன்றை அணிந்து கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி வீதி வீதியாக வந்து கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார். அதனை பத்திரிகையாளர்கள் படம் எடுத்தனர். இதனை கவனித்த பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் படம் எடுத்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை சரமாரியாகத் தாக்கினார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி பத்திரிக்கையாளர் அனைவரையும் சங்கை அருத்துவிடுவதாக பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார் இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற பேரூராட்சி கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்களின் கேமராக்கள் உடைந்தன. இதனிடையே மற்ற கவுன்சிலர்கள் பேரூராட்சிதலைவர் அருணாச்சலத்தை சமாதானப்படுத்தி அழைத்து இழுத்து சென்றனர்.
இச்சமபவத்தை கண்டித்து பத்திரிகையாளர்கள் பேரூராட்சி எதிரே உள்ள சாலையில் படுத்து சிறிது நேரம் சாலை மறியிலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் சண்முகவேல் மறியலில் ஈடுபட்ட பத்திரிக்கையாளரிடம் பேச்சுவார்தை நடத்தி அருணாச்சலத்தை கைது செய்வதாக உறுதியளித்தார் உடன் பத்திரிக்கையாளர்கள் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பேரூராட்சி தலைவர் அருணாச்சலத்தின் மீது புகார் கொடுத்தனர். ஆதன் அடிப்படையில பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் தரப்பிலும் இன்னிலையில அத்துமீறி செய்தி சேகரித்ததாக 3 பத்திரிகையாளர்கள் மீது புகார் கொடுக்கபட்டுள்ளதாக தெரிகிறது. காயம் அடைந்த பத்திரிக்கையாளர்கள் 3 பேர் திருத்துரைப்புண்டி அரசு மருத்துவமனையில் அணுமதிக்கபட்டுள்ளனர்; பத்திரிக்கையாளர் மீது தாக்கதல் சம்பவத்தால் முத்துப்பேட்டை மக்கள் அனைத்து கட்சியினர் சமுக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் , இந்நிலையில் அருணாச்சலத்தை கைது செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர் இதனை தமிழ்நாடு பத்திரிக்கையாளா சங்கம் மற்றும் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது மேலும் இதனை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டுசெல்ல பத்திரிக்கையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது
இதுபற்றி கொசுவலை அணிந்து வந்த கவுன்சிலர் மாரிமுத்து கூறுகையில், முத்துப்பேட்டையில் 25க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பரிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு மர்ம காய்ச்சல் உள்ளது. கொசு ஓழிப்பை தீவிரப்படுத்தாமல் பேரு£ட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்ட நூதனமான முறையில் கொசுவலை அணிந்து வந்ததை படம் பிடித்ததற்காகவே பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
முத்துப்பேட்டையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மன்னார்குடி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துகட்சியினர், பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.
ippady atta thalaivarhal etharku nam mtp ikku....
ReplyDelete