சென்னை, நவம்பர் 04: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலசெயலாளர் அபூபைசல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை கண்டிக்கும் முகமாக இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு 1 வது வார்டு கவுன்சிலர் கொசு வலை போர்த்தி வந்ததை படமெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களுடன் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,பின்னர் பத்திரிக்கையாளர்களை தாக்கியும் உள்ளார்.தாக்கப்பட்டவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
பத்திரிக்கையாளர்கள் மீது நடத்திய தாக்குதலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.தாக்குதல் நடத்திய பேரூராட்சி மன்ற தலைவரை கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யவும் காவல்துறையை கேட்டுக்கொள்கிறது.அதேசமயம் பத்திரிக்கையாளர்கள் அனுமதியின்றி உள்ளே வந்தார் என்று கூறும் நிர்வாகம்,காவல்துறையின் துணையுடன் அவர்களை வெளியேற்றி இருக்க வேண்டுமே தவிர,நேரடி தாக்குதலில் ஈடுபட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment