மதுக்கூர், நவம்பர் 04: மதுக்கூரை சேர்ந்த வாலிபர் முஹம்மது தாரிக் [ வயது 24 ] நேற்று மாலை அதே ஊரைச் சேர்ந்த மதுக்கூர் மைதீன் மற்றும் நியாஸ் ஆகியரோடு ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்டார். உடலில் 3 இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இதையடுத்து இறந்த உடல் பிரத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பிரத பரிசோதனை முடிந்ததை அடுத்து இன்று மதியம் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மதுக்கூர் பெரிய பள்ளியில் மதியம் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment