முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

காந்தியை ஏன் கொலை செய்யக் கூடாது? இந்த தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.. -இந்துத்துவப் பெண்ணின் திமிர் பேச்சு!

சென்னை, நவம்பர் 04: சன் டிவி வளாகத்தில் பேராசியர் மார்க்ஸ் அவர்களுக்கும் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் மத்தியில் நடந்த உரையாடலின் சுருக்கும்:

முஸ்லிம்கள் மீது நடைபெற்ற வன்முறை ஒன்று குறித்து விவாதிக்க 'சன் டிவி' வீரபாண்டியன் கூப்பிட்டிருந்தார்.

முன்னதாக கான்டீனில் அமர்ந்து நானும் அவரும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தோம், சற்று நேரத்தில் என்னுடன் விவாதிக்க இருந்த இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு வந்தார்.

வந்தவுடன் எங்கள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு 'டி.வி.டி'யைத் தந்தார். படு பந்தாவாகப் பேசிக் கொண்டிருந்தார்.

தான், ஒரு முறை காரில் திருச்சி சென்றபோது உளுந்தூர்பேட்டை அருகில் காரில் ஏதோ ரிப்பேர் ஏற்பட்டு, இரண்டு மணி நேரம் அங்கு நிற்க நேரிட்டதாம்.

அதற்குள் ஏகப்பட்ட லாரிகளில் மாடுகள் கேரளாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து மனம் நொந்தாராம்.

அது தொடர்பாக எடுக்கப்பட்ட ஆவணப் படம் இது, என்றார்.

அப்படியா, வீட்டிற்குப் போய் பார்க்கிறேன் என்றேன்.

cow slaughter தொடர்பான அந்தப் படம் எடுக்கும்போது பல மாநிலங்களிலும் தகவல் திரட்டுவதில் ஏற்பட்ட கஷ்டத்தை விளக்கிய அவர், குஜராத் மாநில நிர்வாகத்தை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்.

குஜராத் மாநில 'அனிமல் ஹஸ்பன்டரி' இயக்குனரிடம், அங்குள்ள நிலை குறித்து கேட்ட மாத்திரத்தில் விவரங்களை அடுத்த கணமே அவர் கூறி விட்டாராம்.

அந்த அம்மையாரின் அலட்டல்களால் சற்றே எரிச்சலுற்றிருந்த நான், இந்த இடத்தில் வாய்விட்டுச் சிரித்தேன்.

"why, why, why are you laughing?" என்றார்.

"ஒண்னும் இல்ல. அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்னு நினைச்சுப் பார்த்தேன், சிரிப்பு வந்துவிட்டது" என்றேன்.

"what, what, what do you mean?" என்றார்.

"we don't slaughter cows. we slaughter only Muslims"

அப்படீன்னு அவர் சொன்னாரா? என்றேன்

கொதித்துப் போனார் அவர். சட்டென்று நாற்காலியிருந்து எழுந்தார். "இப்பிடியெல்லாம் பேசக் கூடாது. இங்கே எவ்வளவு வன்முறைகள் நடந்திருக்கு? எவ்வளவு இந்துக்கள் கொல்லப்பட்டிருக்காங்க, அதை எல்லாம் பேசுவீங்களா?' எனச் சீறினார்.

விவாதம் முற்றியது...

காந்தி கொலை பற்றிப் பேச்சு வந்தது. "காந்தியையே கொல்லவில்லையா நீங்கள்?" என்றேன்.

"Yes, Gandhi was killed. Why not one kill him.. இந்தை தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.."என்றார்.

வீரபாண்டியனுக்குத் தர்மசங்கடமாகி விட்டது. என்ன இருந்தாலும் அவர் host அல்லவா. ஒரு மாதிரியாகச் சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார்.

அன்று நிகழ்ச்சி விவாதமும் படு காரசாரமாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்து கீழே செல்ல லிஃப்டை நோக்கிச் சென்றோம். ஊழியர் ஒருவர் எங்களை அழைத்துச் சென்றார்.

லிஃப்ட் அருகில் வந்ததும் அவர், "நான் இந்த ஆளோட போக மாட்டேன்.." எனச் சத்தமாகச் சொல்லிவிட்டு எதிரே இருந்த லிஃப்டை நோக்கி தட தடவென ஓடினார்...

அழைத்து வந்த ஊழியர் ஒரு கணம் திகைத்துப் பின் புன்னகைத்தார்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)