முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

புதுக்கோட்டை சிறையில் முஸ்லிம் கைதி சித்ரவதை - சிறைக்குள் மந்திரம் ஒத கட்டளை -தாடி வைக்க தடை - சிறைக்கு நேரில் சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் முத்துப்பேட்டை ஷிப்லி !!!

புதுக்கோட்டை, நவம்பர் 21: புதுக்கோட்டையில் உள்ள சிறுவர் சிறையில் முஸ்லிம் கைதி ஒருவரை மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு தகவல் கிடைத்தது. உடனே ஷிப்லி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் சகோ சாதிக், நகர நிர்வாகி அத்தீக் , சகோ காயல் ஷரீஃப் ஆகியோர் புதுக்கோட்டை சென்றோம்.நாம் செல்வதற்க்கு முன்பு அங்குள்ள நம் நண்பர் துரை முஹம்மது அவர்களை தொடர்பு கொண்டோம். அவர் புதுக்கோட்டை பெரிய ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பேசிவைத்திருந்தார். நாம் அங்கு சென்றதும் பள்ளி நிர்வாகத்திடம் ஆலோசனை செய்து விட்டு, பாதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நபரை மனு போட்டு பார்த்தோம். செய்தி கேள்விபட்டு நகர தமுமுக நிர்வாகிகள் இரண்டு பேர் எங்களுடன் வந்தனர்.

 



பாதிக்கப்பட்டவர் சொன்ன தகவல்கள்:

@ ஜெப ஆராதனை நடக்கும் இடத்தில் கண்டிப்பாக அமர வைக்கிறார்கள்
@ இங்கே தாடி வைக்கக்கூடாது. தாடியை மழிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
@ கோவை சைக்கோ கொலை குற்றவாளிகள் மூன்று பேரிடம் சிறை வார்டன் சாவியை கொடுக்க, குறிப்பிட்ட முஸ்லிம் கைதியின் அறையில் மூன்று பேரும் சென்று அடித்து காயத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
@ வார்டன் கண் முன்னே தீவிரவாதி,பயங்கரவாதி போன்ற வார்த்தைகளை கூறி அசிங்கம் அசிங்கமாக திட்டினார்கள்.

இந்த தகவல்களை கேட்டுவிட்டு, சிறை சூப்பிரண்ட் ரவீந்திரன் அவர்களை சந்தித்து ,
சிறையில் நடந்த கொடுமைகளை கடுமையாக கண்டித்தோம்,

குறிப்பாக வார்டனே சாவியை கொடுத்து அடிக்கச்சொல்லியுளார். இது சிறுவர் சீர்திருத்தப்பள்ளியா அல்லது ரெளடிகளின் கூடாரமா? என்று கேட்டு வார்டனின் அக்கிரமத்தை கண்டித்தோம். அதற்கு அவர், அது என் பார்வைக்கு வராமல் நடந்து விட்டது. அதை உடனே கண்டித்து விட்டேன். அதற்கு நான் தனிப்பட்ட முறையில் பொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். இனி இது போல் நடக்காது சார். 
நான் பார்த்துக்கொள்கிறேன்.என்றார். 

தாடி விஷயத்தையும், ஜெபக்கூடத்தில் அமரும் விஷயத்திலும் நாம் யாரும் யாரையும் வற்புறுத்துவதில்லை. அவரவர் இஷ்டப்பட்டால் அமரலாம் என்று பொறுமையாக விளக்கம் அளித்தார். 

மேலும் நான் கோயம்புத்தூர் காரன், பாய் மார்கள் அதிகம் இருக்கும் கோவை, பாளையங்கோட்டை சிறைகளில் நான் பணிபுரிந்து இருக்கிறேன். என்னை குறித்து கேட்டுப்பாருங்கள். என்றார்.

நாம், நீங்கள் தெளிவாக பேசுகிறீர்கள். ஆனால் உங்கள் பார்வைக்கு வராமலா இந்த காரியம் நடந்திருக்கும்? வார்டன் காட்டும் மோசமான போக்கை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என்றதும், அவர் மேல் வந்த புகார்களுக்கு நான் உடனே சில நடவடிக்கை எடுத்துவிட்டேன். இனியும் புகார் வராது. வந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். இதை நீங்கள் பெரிதுபடுத்தாதீர்கள் என்றார்.

உடனே நாம்,இந்த பிரச்சனை சாதரணமான விஷயம் அல்ல. வெளியே முஸ்லிம் ஜமாஅத்கள் கடும் கோபத்தோடும், வேதணையோடும் நிற்கிறார்கள். இது முழுக்க மத ரீதியாக துன்புறுத்தும் போக்கை உங்கள் சிறை வார்டன் கடைபிடித்து, அந்த சிறுவனை சித்ரவதை செய்துள்ளனர். மற்ற கொலை குற்றவாளிகள் போல் அல்ல இவர். இவர் மீது பொய் வழக்கு போட்டு இங்கே தள்ளியுள்ளனர். அவர் சிறைக்குள் தொழும் போதும் தொல்லை கொடுத்துள்ளனர். அவர் வணங்குவதற்க்கும தனி இடம் தயார் செய்து கொடுக்குமாறு கூறினோம்.

மேலும் இதே கடும் போக்கு தொடருமானால் உங்கள் சிறைச்சாலையை முற்றுகையிடுவதுடன், தவறு செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம். என எச்சரித்து விட்டு வெளியேறினோம்.விரைவில் மாநில நிர்வாகிகள் சிறைத்துறை ஐ.ஜி யை சந்திக்க உள்ளனர்.
நன்றி:அப்துல் காதர் மன்பஈ

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)