தம்பிக்கோட்டை, நவம்பர் 29: இன்று மாலை 6.30 மணியளவில், நாகூரிலிருந்து கேரளா பாலக்காட்டை சேர்ந்த செளக்கத் அலி என்பவர் டூரிஸ்ட் வேனில் தனது குடும்பத்தினருடன் ஏர்வாடியை நோக்கி ஈசிஆர் சாலையில் பயணமானார். இதில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 20 பேர் இருந்துள்ளனர்.
தம்பிக்கோட்டை சாலையோரக் கடையில் டீ குடிப்பதற்காக வேனை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் வேனின் மீது கற்களால் தாக்கியுள்ளனர். வேனில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலில் வேனின் கண்ணாடி, கதவு உள்ளிட்டவை சேதமடைந்தன. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த வேன் டிரைவர் வேனை பதட்டத்துடன் அதிரைக்கு ஓட்டிவந்துள்ளார்.
இதனை அறிந்த அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் அதிரை இளைஞர்கள் திரண்டு வந்து சம்பவம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் கூறினர்.
பாதிக்கப்பட்டோர் சார்பாக அதிரை காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment