முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஐம்பது ஆண்டிற்கும் மேலாக கொடிகட்டி பறக்கும் கொய்யா மசாலா !அரைசதம் அடித்து சாதனை மேல் சாதனை !!ஆச்சர்யப்படவைக்கும் அசுர வளர்ச்சி !!!வெற்றி மேல் வெற்றியின் பின்னணி என்ன ?ஓர் சிறப்பு பார்வை !!!!

முத்துப்பேட்டை, நவம்பர் 29: மனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி இருதயமும் ,சுவாசமும் இன்றியமையாததோ அதே போல் 

மனிதன் கௌரவமாய் வாழ்வதற்கு வியாபாரமும் ,தொழிலும் வாழ்வின் அச்சாரமாகும் .வியாபாரத்தால் பலர் வாழ்ந்த வரலாறுகளும் ,அதே வியாபாரத்தால் பலர் வீழ்ந்த வரலாறுகளும் உண்டு .

ஆனால் தொடர்ந்து 50- ஆண்டிற்கும் மேலாக ஒரு வியாபாரம் தொழில் சார்ந்த நிறுவனம் ஏறுமுகத்திலேயே -உச்சாணி கொம்பிலேயே இருப்பது என்பது எப்படி சாத்தியமாகும் ?ஆனால் அதை சாத்திய படுத்தி இருக்கிறது கொய்யா மசாலா நிறுவனம் .




















































இது பற்றிய முழுமையான தகவலை பெற முத்துப்பேட்டை உப்பூரில் இயங்கிகொண்டிருக்கும் "கொய்யா மசாலா "நிறுவனத்தில் ஆஜரானோம் .பல்வேறு பணிகளுக்கிடையில் படு பிசியாக இருந்த கொய்யா மசாலா நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனர் கொய்யா NA .சாதிக் பாட்ஷா ,அவர்கள் நம்மை இன்முகத்தோடு வரவேற்றார் .பின்னர் நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார் .

கே ;   கொய்யா மசாலாவின் நிறுவனர் யார் ?

பதில் : கொய்யா மசாலாவின் நிறுவனர் எனது தந்தை கொய்யா ஹாஜி.N .அப்துல் ரெஜாக் அவர்கள் .


கே :  கொய்யா மசாலா எப்போது -  எங்கு தொடங்கப்பட்டது ?

பதில் : கொய்யா மசாலா 1950 -ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது .


கே :  கொய்யா மசாலாவை தமிழகத்தில் தொடங்கியது எப்போது ?

பதில் :  கொய்யா மசாலாவை 19-10-1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கினோம் .


கே :  தமிழகத்தில் கொய்யா மசாலா எத்தனை மாவட்டங்களுக்கு செல்கிறது ?

பதில் :  தமிழகத்தில் கொய்யா மசாலா -தஞ்சை-நாகை -திருவாரூர்-கடலூர் -பாண்டிச்சேரி -மயிலாடுதுறை -திருச்சி-கோவை -வேலூர் -ராமநாதபுரம் -சிவகங்கை -உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு செல்கிறது .




கே : உங்கள் நிறுவனத்தில் எந்தெந்த வகையான மசாலாக்கள் தயாரிக்கபடுகின்றன ?

பதில் : எங்கள் நிறுவனத்தில் சிக்கன் மசாலா -மட்டன் மசாலா -சிக்கன் 65 மசாலா -மீன் மசாலா -சாம்பார் மசாலா -குழம்பு மிளகாய் தூள் மிளகாய் தூள்  -மஞ்சள் தூள் -  சீரகத்தூள் -சோம்பு தூள் -மிளகு தூள் -ஆகியவை தயாரிக்க படுகிறது .இது தவிர இடியாப்ப மாவு ,அரிசி மாவு ,கடலை மாவு போன்றவைகளும் தயாரிக்க படுகிறது .


கே : மசாலா வகைகள் எப்படி தயாரிக்கபடுகிறது ?

பதில் :அதற்குரிய காலங்களில் ,அதற்கான விளைநிலங்களிலிருந்து ,விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து எங்கள் உற்பத்தி தொழிற்சாலையில் நன்கு பதப்படுத்தி மசாலா வகைகளை தயார் செய்கிறோம் ."COLD GRAIN TECHNOLOGY " என்கிற அதிநவீன கருவி மூலம் இரும்பு தாது கலக்காமல் மிகவும் நேர்த்தியான முறையில் உருவாக்கம் செய்கிறோம் .


கே :  விளம்பரங்களே இல்லாமல் எப்படி வியாபாரம் ?


பதில் :தரமான சுத்தமான பொருட்களுக்கு விளம்பரம் எதற்கு ?நாங்கள் 63 ஆண்டுகளாய் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம் .இது வரை ரேடியோவிலோ ,தொலைகாட்சி களிலேயோ விளம்பரங்கள் செய்தது கிடையாது  -.விளம்பரம் செய் பவர்களுக்கு எப்படி வியாபாரமோ ,அதை விட பன்மடங்கு எங்களுக்கு வியாபாரம் .காரணம் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை . 


கே :உங்கள் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் நவீன கருவிகள் பற்றி ?

பதில் : CG பல்வரைசர் (PALVARAISAR )  --அரைக்கும் இயந்திரம் 
               ரோஸ்டர்          (ROSTER )          -- மசாலாக்களுக்கு வாசனையூட்டும்                                                                                                                                          இயந்திரம் 
                மிக்சர் மிஷின்(MIXER MACHINE )--கலக்கும் இயந்திரம் 




கே :மசாலாக்களை  எப்படி பேக்கிங் செய்கின்றீர்கள் ?



பதில் :  AUTOMATIC AUGOR FILLER MACHINE 

               AUTOMATIC  FORM FILLING MACHINE 

                AUTOMATICFILLING மசினே
                 HOT AIR SACHET MACHINE   


ஆகிய  தானியங்கி கருவிகளை கொண்டு பேக்கிங் செய்கிறோம் .
இவ்வாறு பதில் அளித்தார்.

 குறிப்பு ;கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கொய்யா இல்ல திருமணத்திற்கு கலந்து கொள்ள வந்த மாண்புமிகு தமிழக வேளாண் துறை அமைச்சர் அவர்கள் கொய்யா மசாலா நிறுவனத்திற்கு வருகை தந்ததாக  கூறப்படுகிறது .கூடிய விரைவில் கொய்யா மசாலா நிறுவனத்திற்கு தமிழக அரசின் சார்பாக ISO தரச்சான்றும்,வெற்றிகரமாக நிறுவனத்தை நடத்தி வரும் கொய்யா சாதிக் அவர்களுக்கு இளம் சாதனையாளர் விருதும் வழங்கப்படலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது .

சந்திப்பு : ஜே ஷேக்பரீத்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)